| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3016 | திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (கீழ்ப்பாட்டிற்சொன்ன சுவர்க்கம்போலே அஸ்திரமல்லாமல் நிலை நின்ற மோக்ஷமான கைவல்யத்திலும் ஊற்றத்தைவிட்டு பகவத் கைங்கர்யத்தையே பரம ப்ராப்யமாகப் பற்றுங்களென்கிறார்.) 10 | குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல், சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை, மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.–4-1-10 | குறுக,Kuruga - பட்டிமேயாதபடி மனத்தைக் குறுக்கி உணர்வத்தொடு,Unarvathodu - ஜ்ஞாநஸ்வரூபனான ஆத்மாவோடு மிக நோக்கி,Miga nokki - நன்றாகச் சேர்த்து (ஆத்மஸாகூஷாத்காரித்தைப்பண்ணி) எல்லாம் விட்ட,Ellaam vitta - (ஜச்வர்யம், பகவதநுபவம் முதலிய) எல்லாவற்றையும் வெறுத்தவனாய் இறுகல் இறப்பு என்னும்,Irukal irapu ennum - ஸங்கோச மோக்ஷமாகிய கை வல்யமோக்ஷத்தில் விருப்பங்கொண்டவனான ஞானிக்கும்,Gnaanikkum - ஜ்ஞாநயோக நிஷ்டனுக்கும் அப்பயன் இல்லை ஏல்,Appayann illai ael - அந்த பகவதுபாஸநம் இல்லையாகில் சிறுக,Siruga - அற்பமாக நினைவது,Ninaivathu - நினைப்பதற்குறுப்பான ஒர்பாசம் உண்டாம்,Orpasham undaam - ஒரு பந்தம் உண்டாகும் பின்னும்,Pinnnum - அதற்குமேலே வீடு இல்லை,Veedu illai - அந்தக் கைவல்ய மோக்ஷதட ஒரு நாளும் விட்டு நிங்குவதன்று; மறுகல் இல்,Marugal ill - ஹேயப்ரதிபடனான ஈசனை,Eesanai - எம்பெருமானை பற்றி,Partri - ஆச்ரயித்து விடாவிடில்,Vidaavidil - நீங்காவிடில் அஃதே வீடு,Akdhe veedu - அதுவே பரமபுருஷார்த்தம் |