| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3017 | திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (துயரங்கள் தீர்ந்து ஆத்மோஜ்ஜூவநம் பெறுவதே இத்திருவாய்மொழி கற்பதற்குப் பலன் என்று பயனுரைத்துத் தலைகாட்டுகிறார்.) 11 | அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல் கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும் அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–4-1-11 | உய்யப் புகும் ஆறு,Uyyap pugum aaru - உஜ்ஜீவநோபாயம் அஃதே என்று,Akdhe endru - திருநாராணன் தாள்களேயென்று அறுதியிட்டு கண்ணன்,Kannan - எம்பெருமானுடைய கழல்கள் மேல்,Kazhalkal mel - திருவடிகள் விஷயமாக கொய் பூ,Koi poo - திருவடிகள் விஷயமாக பொழில் சூழ்,Pozhil soozh - கொய்வதற்குரிய பூக்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட குருகூர்,Kurugoor - திருநகரிக்குத் தவைரான சடகோபன்,Sadagopan - ஆழ்வாருடைய குற்றேவல்,Kutreval - வாசிக கைங்கர்ய ரூபமாயும் செய் கோலத்து,Sei kolathu - ஸர்வாலங்கார ஸம்பந்தமாயுமிருக்கிற ஆயிரம்,Aayiram - ஆயிரந்தொகையுள்ள சீர் தொடை பாடல்,Seer thodai paadal - திருக்குணங்களை யிட்டுத் தொடுத்த மாலை போன்ற இப்பாடலில் இவை பத்தும்,Ivai pathum - இப்பத்துப் பாசுரங்களையும் அஃகாமல்,Akhamal - குறைவின்றி கற்பவர்,Karppavar - ஓதுமவர்கள் ஆழ் துயர் போய்,Aazh thuyar poi - ஆழ்ந்த துயர் நீங்கப்பெற்ற உய்யற்பாலர்,Uyyar paalar - உஜ்ஜூவிக்குந் தன்மையை யுடையராவர். |