திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3019 | திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (கண்ணபிரான் ஆய்ச்சிகளோடு கூடிக் குரவை கோத்தகாலத்துச் திருவடியிலணிந்து கொண்டிருந்த திருத்துழாய் மாலையை என்மகள் வாய் வெருவுகின்றாளென்கிறாள்.) 2 | வல்லி சேர் நுண்ணிடை ஆய்ச்சியர் தம்மொடும்
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்
நல்லடி மேல் அணி நாறு துழாய் என்றே
சொல்லுமால் சூழ்வினை யாட்டியேன் பாவையே.–4-2-2 | பதவுரை Show / Hideசூழ் வினையாட்டினேன்,Soozh vinaiyaattineen - மிகுந்த தீவினையை யுடையனோகிய என்னுடைய பாவை,Paavai - பதுமை போன்ற பெண்ணானவள் வல்லி சேர்,Valli ser - கொடி போன்று நுண்,Nun - நுட்பமான இடை,Idai - இடுப்பையுடைய ஆய்ச்சியர்தம்மொடும்,Aaychiyarthammodum - கோபிமார்களோடுகூடி கொல்லைமை செய்து,Kollaimai seydhu - வரம்புகடந்த செயல்களைச் செய்து குரவை பிணைந்தவர்,Kuravai pinaindhavar - ராஸக்ரீடை செய்த கண்ணபிரானுடைய நல் அடி மேல் அணி;,Nal adi mel ani; - அழகிய திருவடிகளின் மீது சாத்தின நாறு துழாய் என்றே,Naru thuzhai endre - நறுமணம்மிக்க திருத்துழாயென்றே சொல்லும்,Sollum - சொல்லுகின்றாள்; ஆல்,Aal - அந்தோ! |