| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3020 | திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (உலகளந்தருளின எம்பெருமான் திருவடிகளில் திருத்துழாயை என் மகள் ஆசைப்படாநின்றாளென்கிறாள். மூலத்தில் “தேவர்கள் மாமுனிவரிறைஞ்சநின்ற சேவடி” என்றிவ்வளவேயுள்ளது: “உலகளந்த திருவடி” என்று வ்யக்தமாக இல்லை; “பாற்கடல் சோந்த பரமனுடைய அழகிய திருவடிகளிலே அணிந்த செம்பொற்றுழாயென்று இவள் கூப்பிடா நிற்குமென்கிறாள்” என்றருளிச்செய்தார் ஆறாயிரப்படியில் பிள்ளான். மற்ற வியாக்கியானங்களில்-“உலகளந்தருளனவன்; திருவடிகளிற் திருத்துழாயை ஆசைப்படாநின்றாளென்கிறாள்” என்றுள்ளது.) 3 | பாவியல் வேத நன் மாலை பல கொண்டு, தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே.–4-2-3 | பா இயல் வேதம்,Paa iyal vedham - சந்தஸ்ஸூக்கள் பொருந்திய வேதங்களாகிற நல் பல மாலை கொண்டு,Nal pala maalai kondu - திவ்யமான பல மாலைகளைக் கொண்டு தேவர்கள்,Devargal - தேவர்களும் மா முனிவர்,Maa munivar - மஹா முனிகளும் இறைஞ்ச நின்ற,Irainja ninra - ஆராதிக்கும்படி (உலகையளந்து) நின்ற சே அடி மேல்,Se adi mel - திருவடிகளின் மேலே அணி,Ani - அணிந்த செம் பொன் துழாய் என்றே,Sem pon Thuzhai endre - செவ்விதமாய் விரும்பத்தக்கதான திருத்துழா யென்றே கூவும்,Koovum - கூப்பிடா நின்றாள் (யாரென்னில்) கோள் வினையாட்டியேன்,Kol vinaiyaattiyen - வலிய பாபத்தைப் பண்ணினவளான என்னுடைய கோதை,Kodhai - சிறந்த கூந்தலையுடையளான பெண்பிள்ளை |