திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3021 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3021திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (திருநாட்டி லெழுந்தருளி யிருக்கிற பராத்பரனுடைய திருவடிகளில் திருத்துழாயை என் மகள் ஆசைப்படாநின்றாளென்கிறாள்.) 4
கோது இல் வண்புகழ் கொண்டு, சமயிகள் பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான், பரன் பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே ஓதுமால்; ஊழ் வினையேன் தடந் தோளியே.–4-2-4
பதவுரை Show / Hide
ஊழ்வினையேன்,oozhvinaiyen - பெரும்பாவத்தை யுடையேனாகிற எனது
தட தோளி,thada tholi - பெருந் தோள்களை யுடையளான பெண் பிள்ளை
சமயிகள்,samayigal - சமயவாதிகள்
கோது இல்,kodhu il - குற்றமற்ற
வண் புகழ் கொண்டு,van pugazh kondu - விலக்ஷணமான குணங்களைக் கொண்டு
பேதங்கள் சொல்லி,pethangal solli - தாம்தாம் பற்றிய குணங்களின் ஏற்றங்களைச் சொல்லி
பிதற்றும் பிரான்,pitharum piraan - பிதற்றும்படியாகவுள்ள ஸ்வாமியான
பரன்,paran - பரம புருஷனுடைய
பாதங்கள்மேல்,paadhangal mel - திருவடிகளின்மேலே
அணி,ani - (நித்ய முக்தர்கள்) சாத்தின
பைம் பொன்,paim pon - பசும்பொன்போல் விரும்பத்தக்க
துழாய் என்றே ஓதும்,thuzhai endre odum - திருத்துழாயென்றே சொல்லுகின்றாள்.
ஆல்,aal - அந்தோ