| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3024 | திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (அமுதமளிக்கக் கடல்கடைந்த காலத்துப் பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே வைத்தருளின எம்பெருமானுடைய திருவடிகளில் திருத்துழாயை என்மகள் ஆசைப்படுகின்றாளென்கிறாள்.) 7 | மடந்தையை வண் கமலத் திரு மாதினைத் தடங்கொள் தார் மார்பினில் வைத்தவர் தாளின் மேல் வடங்கொள் பூந் தண் அம் துழாய் மலர்க்கே இவள் மடங்குமால்; வாணுதலீர்! என் மடக்கொம்பே.–4-2-7 | வாள் நுதலீர்,vaal nudhaleer - ஒளி பொருந்திய நெற்றியையுடைய பெண்காள்! என் மட கொம்பு இவள்,en mada kombu ival - இளங்கொடி போன்ற எனது இப்பெண்பிள்ளை மடந்தையை,madandhaiyai - இளமைப் பருவமுள்ள வண் கமலம் திரு மாதினை,van kamalam thiru maadhinai - அழகிய தாமரைப்பூவிற் பிறந்த பிராட்டியை தடம் கொள் தார் மார்பினில்,tadam kol thaar maarbinil - விசாலமானதும் மாலையணிந்ததுமான திரு மார்பிலே வைத்தவர்,vaithavar - (பாற்கடல் கடைந்த காலத்து ஏற்றுக்கொண்ட பெருமானுடைய தாளின் மேல்,thaalin mel - திருவடிகளின்மீது (சாத்தின) வடம் கொள்,vadam kol - செறியத் தொடுக்கப்பட்டதும் பூ,poo - அழகியதும் தண்ணம்,thannam - குளிர்ச்சி பொருந்தியதுமான துழாய் மலர்க்கே,thuzhai malarkke - திருத்துழாயின் பொருட்டே மடங்கும்,madangum - சுருண்டு விழுகின்றாள் |