| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3027 | திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (கீழ்ப்பாட்டில் ‘நங்கைமீர்!’ என்று விளிக்கப்பட்ட நங்கைகள் ப்ராங்குச நாயகியின் தாயை நோக்கி ‘அம்மா! உன்மகள் நீயிட்ட வழக்கன்றோ; அவளுக்கு ஹிதம் சொல்லாகாதோ?” என்ன, அவர்களுக்கு விடை கூறுகின்றாள்) 10 | என் செய்கேன்? என்னுடைப் பேதை,என் கோமளம், என் சொல்லும் என் வசமும் அல்லள்; நங்கைமீர்! மின்செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய் பொன்செய் பூண் மென்முலைக்கு என்று மெலியுமே.–4-2-10 | நங்கைமீர்,nangaimir - பெண்காள்! என்னுடைபேதை என் கோமளம்,ennutaipeedhai en komalam - பேதைத்தனமும் ஸூகுமாரத் தன்மையும் பொருந்திய என்மகளானவள் என் சொல்லும் என் வசமும் அல்லன்,en sollum en vasamum allan - என் சொல்லிலும் நிற்பதில்லை, என் வசத்திலும் நிற்பதில்லை; மின் செய்,min sey - ஒளியைச் செய்கின்ற திருவாபரமணிந்த திருமார்பையுடையவனான கண்ணன்,kannan - கண்ணபிரானுடைய கழல்,kazhal - திருவடிகளைலுள்ள துழாய்,thuzhai - திருத்துழாயை பொன் செய்,pon sey - பசலை நிறம் பூத்ததும் பூண்,poon - ஆபரணங்களிணிந்ததும் மெல்,mel - பிரிவாற்றகில்லாததுமான முலைக்கு என்று,mulaikku endru - முலையில் அணிந்துகொள்ள வேணுமென்று விரும்பி மெலியும்,meliyum - (அது கிடையாமையாலே) உடம்பு இளைக்கப்பெறுகின்றாள்; என் செய்கேன்,en seyken - இதற்கு யான் யாது செய்வேன்? |