Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3028 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3028திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (இத்திருவாய்மொழி கற்றார் நித்யஸூரிகளோடு ஒரு கோவையாகப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிற பாசுரமிது. ஆழ்வார் மெலியுமளவான வளவிலே எம்பெருமான் வந்து முகங்காட்டி ஆற்றாமையைப் போக்கி ஒருவாறு ஆச்வஸிப்பித்தம்மை முதலடியில் தொனிக்கும்.) 11
மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்
மலிபுகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மலிபுகழ் வானவர்க்கு ஆவர் நற்கோவையே.–4-2-11
மெலியும் நோய் தீர்க்கும்,meliyum noy theerkkum - மெலிவை விளைக்கும்படியான பிரிவுநோயைப் போக்கவல்லவனான
நம் கண்ணன்,nam kannan - நமது கண்ணபிரானுடைய
கழல்கள் மேல்,kazhalkal mel - திருவடி விஷயமாக
மலி புகழ்,mali pugal - வளர்ந்த புகழையுடைய
வண் குருகூர் சடகோபன்,van kurukoor sadagopan - திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்
சொல்,sol - அருளிச்செய்த
ஒலி புகழ்,oli pugal - கொண்டாடப்பட்ட குணபூர்த்தியையுடைய
ஆயிரத்து,aayiraththu - ஆயிரத்திலும்
இப்பத்தும்,ippattum - இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லவர்,vallavar - ஓதவல்லவர்கள்
மலி புகழ்,mali pugal - மிக்கபுகழையுடைய
வானவர்க்கு,vaanavarkku - நிதய்சூரிகளுக்கு
நல் கோவை ஆவர்,nal kovai aavar - நல்ல சேர்த்தியாவர்.