திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3029 | திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (நப்பின்னைப் பிராட்டி நிமித்தமாக எருதுகளை அடர்க்கும்போதும், ஸீதாபிராட்டி நிமித்தமாக இராவணனை யழிக்கும் போதும் அந்தந்த ஸமங்களிலுண்டான சிரமம் தீரும்படி அடியேன் அவ்வப்போதுகளில் ஸந்நிஹிதனாயிருந்த உபசாரங்கள் செய்யப் பெற்றிலேன்! அப்படியிருந்தும் என்னுடைய ஹ்ருதயத்தையே உனக்குப் பரம போக்யமாகக் கொண்ட விதம் என்னே! என்று ஈடுபடுகிறார்.) 1 | கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்! மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்! குல நல் யானை மருப்பு ஒசித்தாய்!
பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கேனேலும், நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.–4-3-1 | பதவுரை Show / Hideகோவை வாயாள் பொருட்டு,kovai vaayaal poruttu - கோவைக்கனிபோற் சிவந்த அதரத்தையுடையவளான நப்பின்னைப் பிராட்டி நிமித்தமாக ஏற்றின்,etrin - எருதுகளினுடைய எருத்தம்,eruththam - பிடரியை இறுத்தாய்,iruththai - முறித்தவனே! மதிள்,madhil - மதிள் சூழ்ந்த இலங்கை,ilangai - லங்காபுரிக்கு கோவை,kovai - அரசனான ராவணன் லீய,leeya - முடியும்படியாக குனித்தாய்,kuniththai - வளைத்தவனே! குலம் நல் யானை,kulam nal yaanai - நல்ல ஜாதியிலே பிறந்து அழகியதான குலவயா பீடயானையினுடைய மருப்பு,maruppu - கொம்பை ஒசித்தாய்,osiththai - முறித்தொழிந்தவனே! பூவை லீயா நீர்,poovai leeya neer - புஷ்பத்தை விட்டு நீங்காத தீர்த்தத்தை (புஷ்பத்தையும் தீர்த்தத்தையும் என்றபடி) தூவி,thoovi - பணிமாறி போதால்,pothaal - உரிய காலங்களில் வணங்கேன் ஏலம்,vanangean elam - உன்னைப் பணிந்திலேனாகிலும் நின்,nin - உன்னுடைய பூவை லீ ஆம் மேனிக்கு,poovai lee aam menikku - காயாம் பூப்போன்ற திருமேனிக்கு பூகம் சாந்து,poogam saandhu - சாத்தத் தகுதியான சந்தனம் என் நெஞ்சமே,en nenjame - எனது நெஞ்சமேயாகும். |