| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3030 | திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (தமது மனமொழி மெய்களாகிற முக்கரணங்களும் எம்பெருமானுக்குப் பரம யோக்யமாகின்றமையை வியந்து கூறுகின்றார். எம்பெருமானது திருமேனியின் வைலக்ஷண்யத்தையும், அவன்றனக்குத் தம்மிடத்து உண்டான விருப்பத்தையும் சிந்தனை செய்து, முன் சொன்னதையே மீண்டும் வாய்வெருவுகிறபடி.) 2 | பூசும் சாந்து என் நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய வாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே; தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே; ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2 | ஈசன்,eesan - ஸர்வேச்வரனாயும் ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை,gnalam undu umizhndha endhai - (ஒரு காலத்தில்) உலகங்களையுண்டு (மற்றொரு காலத்திலே) வெளிப்படுத்தின ஸ்வாமியும் ஏகமூர்த்திக்கு,ekamurththikku - ஒப்பற்ற திவ்யமங்கள் விக்ரஹத்தையுடையனாயுமிருக்கிற பெருமானுக்கு பூசும் சாந்து,poosum saandhu - பூசுவதற்குரிய சந்தனம் என் நெஞ்சமே,en nenjame - என் மனமேயாகும்; புனையும் கண்ணி,punaiyum kanni - அணிந்து கொள்ளுதற்கு உரிய மாலை எனதுடைய,enadudaiya - என்னுடைய வாசகம் செய் மாலை,vaasagam sey maalai - வாக்கினால் தொடுக்கப்படுகிற் சொல்மாலையேயாம்; வான் பட்டு ஆடையும்,vaan pattu aadaiyum - சிறந்த திருப்பரி வட்டமும் அஃதே,akthe - அந்தர் சொல்மாலையேயாம்; தேசம் ஆன,desam aana - தேஜஸ்கரமான அணி கலனும்,ani kalanum - அணியப்படும் ஆபரணமும் என் கை கூப்பு செய்கை ஏ,en kai koopu seygai ae - எனது அஞ்சலிபந்தமேயாம்; |