| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3031 | திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (கீழ்த் திருவாய் மொழியில் தமக்குண்டான ஆற்றாமை தீரப் பெற்றமையை இங்கருளிச் செய்கிறார்.) 3 | ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே!உன் ஆக முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே.–4-3-3 | ஏகமூர்த்தி,ekamurththi - காரணபூதமான ஒரு மூர்த்தியாய் இரு மூர்த்தி,iru murththi - (ஸ்ருஷ்டியின் தொடக்கத்திலே) ப்ரக்ருதி மஹான்களைச் சரீரமாகக்கொண்டு நிற்கும் மூர்த்தியாய் மூன்று மூர்த்தி,moonru murththi - ஸாத்லிகமாயும் ராஜஸமாயும் தாமஸமாயும் மூன்று வகைப்பட்ட அஹங்காரத்தை வடிவமாகக் கொண்ட மூர்த்தியாய் பல மூர்த்தி ஆகி,pala murththi aagi - மநஸ் முதலிய கரணங்களை வடிவாகவுடையனாய் ஐந்து பூதம் ஆய்,aindhu bootham aay - பஞ்ச பூதங்களை வடிவாகவுடையனாய் இருண்டு சுடர் ஆய்,irundu sudar aay - ஸூர்ய சந்திரர்களிருவரையும் வடிவாகவுடையனாய் அரு ஆகி,aru aagi - ஸர்வாந்தர்யாமியாய் நடு கடலுள்,nadu kadalul - திருப்பாற் கடல் நடுவே நாகம் ஏறி,naagam aeri - திருவனந்தாழ்வான் மீது ஏறி துயின்ற,thuyindra - திருக்கண்வளர்ந்தருளின நாராயணனே,naarayananey - நாராயணனே! உன்,un - உன்னுடைய ஆகம்,aagam - திருமேனியையும் முற்றம்,mutram - அதற்கு வேண்டிண மற்றெல்லாவற்றையும் அகத்து,agathu - எனது நெஞ்சினுள்ளே அடக்கி,adakki - அடங்கவைத்து ஆவி,aavi - உன் திருவுள்ளம் அல்லல் மாய்த்ததே,allal maayththadhey - இடர் நீங்கப்பெற்றதே! |