| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3032 | திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (பூதனையை முடித்தல் முதலான ஸமயங்களில் விடாய்தீர வந்துநின்று சிசிரோபசாரம் பண்ணப் பெற்றிலேனே யாகிலும் உன் திருமேனிக்கு என்னுயிரே உபகாரமாய்விட்டதே யென்கிறார்) 4 | மாய்த்தல் எண்ணி ‘வாய் முலை தந்த மாயப் பேய் உயிர் மாய்த்த ஆய மாயனே! வாமனனே! மாதவா! பூத்தண் மாலை கொண்டு உன்னைப் போதால் வணங்கேனேலும்,நின் பூத்தண் மாலை நெடு முடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே.–4-3-4 | மாய்த்தல் எண்ணி,maayththal enni - முடிப்பதாக நினைத்து வாய்,vaai - வாயிலே முலை தந்த,mulai thantha - நஞ்சு தீற்றிய முலையை வைத்த மாயம் பேய்,maayam pey - பூதனையினுடைய உயிர்,uyir - பிராணனை மாய்த்த,maayththa - முடித்துவிட்ட ஆய! மாயனே!,aaya! maayaney! - வாமனனே! மாதவா! உன்னை,unnai - உன்னை பூ தண் மாலை கொண்டு,poo than maalai kondu - பூக்கள் தொடுத்துக் குளிர்ந்த மாலைகளைக் கொண்டு போது,podhu - அவ்வப்போதுகளில் வணங்கேன் ஏலும்,vanangen elum - வழிபாடு செய்யப்பெற்றிலேனாகிலும் நின்,nin - உன்னுடைய பூ தண் மாலை நெடு முடிக்கு,poo than maalai nedu mudikku - புஷ்பமயமாய்ச் செவ்விய மாலையாலே அலங்கரிக்கப்பட்ட நீண்ட திருமுடிக்கு புனையும் கண்ணி,punaiyum kanni - அலங்காரமாய்ச் சாத்துகின்ற மாலை எனது உயிரே,enathu uyire - என் பிராணனாவதே! |