திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3033 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3033திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (தம்முடைய உயிரையும் காதலையும் எம்பெருமான் போரப் பொலிய அபிமானித்த படியைப் பேசுகிறார்.) 5
கண்ணி எனது உயிர் காதல் கனகச் சோதி முடி முதலா எண்ணில் பல் கலன்களும்; ஏலும் ஆடை யும் அஃதே; நண்ணி மூவுலகும் நவிற்றும் கீர்த்தியும் அஃதே; கண்ணன் எம்பிரான் எம்மான் கால சக்கரத் தானுக்கே.–4-3-5
பதவுரை Show / Hide
காலம் சக்கரத்தான்,kaalam sakkaraththaan - காலத்தை நடத்துகிற திரு வாழியையுடையனாய்
எம்மான்,emmaan - எனக்கு ஸ்வாமியாய்
எம் பிரான்,em piraan - எனக்கு மஹோபநாரகனான
கண்ணனுக்கு,kannanukku - ஸ்ரீ க்ருஷ்ணபகவானுக்கு
எனது உயிர்,enathu uyir - என் ஆத்மவஸ்து
கண்ணி,kanni - மாலை போல் போக்யமாகா நின்றது;
காதல்,kaadhal - எனது ஆசையானது
கனகம் சோதி முடி முதல் ஆ,kanakam sothi mudi muthal aa - பொன்மயமாய் ஒளியையுடைத்தான திருவபிஷேகம் முதலாக
எண் இல் பல் கலன்களும்,en il pal kalan'galum - கணக்கற்ற பல திருவாபரணங்களாக ஆகா நின்றது;
எலும் ஆடையும்,elum aadayum - ஏற்றதான பீதாம்பரமும்
அஃதே,akthe - அந்தக் காதலேயாம்;
மூ உலகும்,moo ulakum - மூவுலகங்களும்
நண்ணி,nanni - கிட்டி
நவிற்றும்,navitrum - துதிக்கின்ற
கீர்த்தியும்,keerththiyum - புகழும்
அஃதே,akthe - அந்தக காதலேயாம்.