திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3036 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3036திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (எனக்காக ஸகலலோகங்களையும் வியாபித்து என்னையங்கீகரித்த உன் படி பேச்சுக்கு நிலமன்று என்கிறார்.) 8
என்னது ஆவி மேலையாய்! ஏர் கொள் ஏழ் உலகமும் துன்னி முற்றும் ஆகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்! உன்னது என்னது ஆவியும்; என்னது உன்னது ஆவியும்; இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லனே?–4-3-8
பதவுரை Show / Hide
என்னது ஆவி மேலியாய்,ennathu aavi meliyai - என் ஆத்மவஸ்துவிலே அபிநிவேசமுடையனாய்க் கொண்டு
ஏர்கொள் ஏழ் உலகமும்,erkoll ezh ulagamum - அழகிய கைல லோகங்களிலும்
முற்றும் ஆகி நின்ற,mutrum aagi ninra - ஸகல பதார்த்தங்களும் தனக்கு ப்ரகாரமாம்படி நின்ற
சோதி ஞானம் மூர்த்தியாய்,chothi gnanam moorthiyai - சோதிமயமான ஞானத்தை ஸ்வரூபமாகவுடையவனே!
என்னது ஆவி,ennathu aavi - என் ஆத்மஸ்வரூபம்
உன்னதும்,unnathum - நீயிட்ட வழக்காகவும்
என்னதும்,ennathum - நானிட்ட வழக்காகவுமான
இன்ன வண்ணமே நின்றாய்,inna vanname ninraai - இப்படியிலே நின்றாய்
என் உரைக்க வல்லேன்,en uraikka valleyn - இதற்கு என்ன பாசுர மிட்டுச் சொல்லுவேன்?