திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3037 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3037திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (எம்பெருமானுடைய ப்ரணயித்வகுணம் தம்முடைய பேச்சுக்கு நிலமன்று என்பதை அழகுபட அருளிச்செய்கிறார்.) 9
உரைக்க வல்லன் அல்லேன்; உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின் கரைக்கண் என்று செல்வன் நான்? காதல் மையல் ஏறினேன்; புரைப்பு இலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே! இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்.–4-3-9
பதவுரை Show / Hide
புரைப்பு இலாத பரம்பரனே,puraippu ilaatha parambarane - புரையற்ற பரத்வம் பொருந்திய எம்பெருமானே!
பொய் இலாத,poy ilaatha - (என்னோடுண்டான கலவியில்) பொய்யில்லாத
பரம் சுடரே,param sudare - பரஞ்சோதிப் பெருமானே!
உரைக்க வல்லேன் அல்லேன்,uraikka valleyn alleyn - நான் ஒன்றும் சொல்ல சக்தியுடையேனல்லேன்;
உலப்பு இல்,ulappu il - முடிவில்லாத
உன் கீர்த்தி வெள்ளத்தின்,un keerthi vellaththin - உனது ப்ரணயித்வ குணக் கடலினுடைய
கரைக் கண்,karaik kan - கரையிடத்து
நான் என்று செல்வன்,naan enru selvan - நான் என்றைக்கு அடியிடுவேன்? (ஒரு நாளும் அடியிடமாட்டேன்;)
காதல்,kaadhal - பிரேமத்தினால்
மையல் ஏறிறனேன்,maiyal Eriranaen - பிச்சேறிக் கிடக்கிறேனத்தனை
நல்ல,nalla - விலக்ஷணர்களான
மேல் மக்கள்,mel makkal - நித்ய ஸூரிகள்
இரைத்து ஏத்த,iraitthu Ethan - பேராரவாரஞ்செய்து துதிக்க (அவ்வழியைப் பின்பற்றி)
யானும் ஏத்தினேன்,yaanum Ethanain - நானும் சிறிது துதித்தேனித்தனை.