திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3038 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3038திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (ஒருவராலும் எல்லைகாண வொண்ணாதபடி அளவிறந்த பெருமையையுடைய பெருமானை நான் ஸத்தை பெறுவதற்காக ஏத்தினேனத்தனை யென்கிறார்.) 10
யானுமேத்தி ஏழுலகும் முற்றுமேத்தி பின்னையும் தானுமேத்திலும் தன்னை யேத்த வேத்த வெங்கு எய்தும் தேனும் பாலும் கன்னலும் அமுதமாகித் தித்திப்ப யானும் எம்பிரானையே ஏத்தினேன் யானுய்வானே –4-3-10
பதவுரை Show / Hide
யானும்,Yanum - எம்பெருமானருளால் அறிவுபெற்ற நானும் துதித்து,
ஏத்தி,Eththi - துதித்து,
முற்றும் ஏழ் உலகும் ஏத்தி,Mutrum ezhu ulakum eththi - எல்லாவுலகங்களும் ஒன்று கூடி யேத்தி,
பின்னையும்,Pinnaiyum - அதற்கு மேலே
தானும் ஏத்திலும்,Thanum eththilum - ஸர்வஜ்ஞனாய் ஸர்வசக்தனான தானுங்கூடி ஏத்தினாலும்
தன்னை ஏத்த ஏத்த,Thannai eththa eththa - தன்னைத்துதிக்கத்துதிக்க
எங்கு ஏய்தும்,Engu eythum - முடிவு பெறுவது எது? (ஆகிலும்)
யான் உய்வான்,Yan uyyvan - நான் தரித்திருப்பதற்காகவே,
தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகி தித்திப்ப,Thenum palum kannalum amudhum aaki thiththippa - தேனும் பாலும் கன்னலும் அமுதும போலே ரஸிக்க,
யானும் எம்பிரானையே ஏத்தினேன்,Yanum empiranaie eththinen - நானும் எம்பெருமானையே ஏத்தினேன்.