| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3039 | திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (இத்திருவாய் மொழியை ஓதுமவர்கள் உபய விபூதியையும் தாம் இட்ட வழக்காக நிர்வஹிக்கப் பெறுவர்களென்கிறார்.) 11 | உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல் செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன் பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.–4-3-11 | மற்று,Matru - வேறு வழியினால் உய்வு உபாயம் இன்மை,Uyvupayam inmai - தரிக்கவிரகில்லாமையை தேறி,Theri - துணிந்து கண்ணன்,Kannan - எம்பெருமானுடைய ஓண் கழல்கள் மேல்,On kazhalgal mel - அழகிய திருவடிகள் விஷயமாக, செய்ய தாமரை பழனம்,Seyya tamarai pazhanam - செந்தாமரைகள் நிறைந்த நீர்நிலங்களையுடைய தென் நன் குருகூர்,Then nan kurugoor - தென் திசையிலுள்ள அழகிய திருக்குருகூர்க்குத் தலைவரான சடகோபன்,Sadagopan - ஆழ்வார் (அருளிச் செய்ததான) பொய் இல் பாடல் ஆயிரத்துள்,Poi il paadal aayirathul - யதார்த்தம் பொருந்திய ஆயிரத்தினுள்ளும் இவை பத்தும்,Ivai patthum - இப்பத்துப் பாசுரங்களையும் வல்லார்கள்,Vallargal - ஓதவல்லவர்கள் வையம்,Vaiyam - இப்பூமண்டலத்திலே மன்னி வீற்றிருந்து,Manni veetrirundhu - நெடுங்காலம் பொருந்தியிருந்து மண்ணூடே,Mannude - இந்நிலத்திலேயே விண்ணும் ஆள்வர்,Vinnum aaluvar - பரம பதத்தையும் ஆளப் பெறுவர்கள். |