| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3041 | திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (என் தெய்வம் உருவில் சிறுமான் -என்னுடைய (நித்யஸூரிகள் வடிவுபோல) அப்ராக்ருதமான வடிவை யுடையளாய் மான்போல் இளைய பருவத்தை யுடையளான இவள் செய்கின்ற காரியங்கள் ஒன்றும் அறிகிலேன்.) 2 | பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்; செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி, ‘சிரீதரன் மூர்த்தி ஈது’ என்னும்; நையும் கண்ணீர் மல்க நின்று, ‘நாரணன்’ என்னும்; அன்னே!என் தெய்வ உருவிற் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே.–4-4-2 | பெய் வளை கைகளை,Pey valai kaigalai - (பலகாலும் கழன்று பிறகு) இடப்படாநிற்கிற வளைகளையுடைய தனது கைகைகளை கூப்பி,Kooppi - குவித்து அஞ்சலி பண்ணி (கடலைப் பார்த்து) பிரான்,Piraan - உபகார சீலனான எம்பெருமான் கிடக்கும்,Kidakkum - (எனக்கு முகங்காட்டப்) பள்ளிகொண்டிருக்கிற கடல் என்னும்,Kadal ennum - கடல் (இது) என்று சொல்லுவது; செய்யது ஓர் ஞாயிற்றை காட்டி,Seyyadhor nyaayitrrai kaatti - சிவந்த ஒளியில் ஒப்பற்றவனான சூரியனைச் சுட்டிக் காட்டி சிரிதரன் மூர்த்தி ஈது என்னும்,Sreedharan moorthi idhu ennum - ‘பெரிய பிராட்டியாரோடே கூடியுள்ள எம்பெருமானது வடிவு இது’ என்று சொல்லுவாள்; கையும்,Kaiyum - (தான் அவனைக்கிட்டி அநுபவிக்கப்பெறாமையாலே) வாடுவாள்; கண் நீர் மலக நின்று,Kann neer malaga nindru - (அந்த வாட்டத்தினாலே) கண்ணீர் பெருக நின்று நாரணன் என்னும்,Naaranan ennum - ‘நாரணன்’ என்று வாய்வெருவுவாள், அன்னே,Anne - அம்சே! |