திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3042 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3042திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (மகளுடைய அதிப்ரவ்ருத்திகளைச் சொல்லப் புகுந்து, இவற்றுக்குக் கணக்கில்லை யென்கிறாள்.) 3
அறியும் செந்தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்;மெய் வேவாள்; எறியும் தண் காற்றைத் தழுவி, ‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்; வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்றது என்கண்ணுக்கு ஒன்றே?–4-4-3
பதவுரை Show / Hide
வினையுடை யாட்டியேன் பெற்ற,Vinaiyudai yaattiyen petra - கொடுவினையேனாகிய நான் பெற்ற
செறி வளை முன் கை சிறு மான்,Seri valai mun kai siru maan - நெருங்கின வளையல்களயைணிந்த முன்கைகளையுடைய இவ்விளம் பெண்ணானவள்
அறியும்,Ariyum - சுடுமென்று எல்லாராலும் அறியப்பட்ட
செம் தீயை தழுவி,Sem theeyai thazhuvi - சிவந்த நெருப்பைத் தழுவி
அச்சுதன் என்னும்,Achuthan ennum - ‘எம்பெருமான்’ என்கிறாள்;
மெய் வேவாள்,Mei vevaal - உடம்பு வேகின்றிலள்;
எறியும்,Eriyum - வீசுகின்ற
தண் காற்றை தழுவி,Than kaatrai thazhuvi - குளிர்ந்த காற்றைத் தழுவி
என்னுடை கோவிந்தன் என்னும்,Ennudai Govindhan ennum - ‘என்னுடைய கண்ணன்’ என்கிறாள்;
வெறிகொள்,Verikol - பரிமளம்மிக்க
துழாய் மலர்,Thuzhai malar - திருத்துழாய் மலர்கள்
நாறும்,Naarum - மணக்கப் பெற்றிருக்கின்றாள்:
செய்கின்றது,Seygindrathu - (இங்ஙனே இவள்) செய்கின்ற தொழில்கள்
என் கண்ணுக்கு ஒன்றே,En kannukku ondre - என் கண்களுக்கு ஒன்றுதானா? பலபல.