| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3043 | திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (எல்லாக் கலைகளும் நிரம்பப்பெற்ற சந்திரனைச் சுட்டிக்காட்டி ‘நீலமணிவண்ணனே!’ என்று அழைக்கின்றாள். (உயரநின்ற வொரு மலையைப் பார்த்து, உலகங்களை அளந்தருள்வதற்காக நிமிர வளர்ந்து நிற்கிற ஸர்வேச்வர னென்றுகொண்டு ‘என் ஆர்த்தி தீரவாராய்’ என்றழைக்கின்றாள். நன்றாகப் பெய்யும் மேகத்தைக் கண்டால் ‘நாராயணன் நம் உறாவுதல் தீர வந்தான்’ என்று, மேகத்தைக் கண்டு மயில் கூத்தாடுமாபோலே கூத்தாடு பண்ணி விட்டாரே! என் செய்வேன்! என்கிறாள் திருத்தாய். ஒன்றிய என்றது ஸகல கலைகளும் பொருந்தப்பெற்ற என்றபடி) 4 | ஒன்றிய திங்களைக் காட்டி, ‘ஒளி மணி வண்ணனே!’ என்னும்; நின்ற குன்றத்தினை நோக்கி, ‘நெடுமாலே! வா!’ என்று கூவும்; நன்று பெய்யும் மழை காணில், ‘நாரணன் வந்தான்’ என்று ஆலும்; என்று இன மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத்தையே.–4-4-4 | ஒன்றிய,Ondriya - (எல்லாத்தலைகளும்) பொருந்திய திங்களை காட்டி,Thingalai kaatti - பூர்ண சந்திரனை (அருகில் நினறார்க்குக்) காட்டி ஒளி மணிவண்ணனே என்னும்,Oli manivannane ennum - ஒளியையுடைத்தான நீலமணிபோன்ற வடிவையுடையவனே! என்று கூப்பிடுகிறாள்; நின்ற குன்றத்தினை நோக்கி,Nindra kundrathinai nokki - (அந்தச் சந்திரமண்டலத்தளவு உயர்ந்து) நிற்கிற மலையைப்பார்த்து நெடுமாலே வா என்று கூவும்,Nedumaale vaa enru koovum - ‘நெடுமாலே! வாராய்’ என்று அழைக்கின்றாள்; (ஸகல உலகங்களையும் அளக்கைக்கு வளர்ந்தருளின எம்பெருமான் என்று நினைத்து) நன்று பெய்யும் மழை காணில்,Nandru peyyum mazhai kaanil - நன்றாகப்பொழியும் மேகத்தைக்கண்டால் நாரணன் வந்தான் என்று,Naaranan vanthaan enru - நாராயணன் வந்தான் என்று கூறி ஆலும்,Aalum - மேகத்தை கண்ட மயில் போலே கூத்தாடுகின்றாள்; என்னுடை கோமளத்தை,Ennudai komalaththai - மெல்லியலாளான எனது மகளுக்கு என்று இன மையல்கள்,Endru ina maiyalgal - இப்படிப்பட்ட மயக்கங்களை செய்தார்,Seidhaar - பண்ணினார். |