| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3044 | திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (ஸ்ரீ ஆறாயிரப்படி - கோமள வான் கன்றைப் புல்கி, -இவை ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்; போம் இள நாகத்தின் பின் போய்,-அத்தைப் புல்கி இவ்விளமையும் மார்த்தவமும் அழகும் எம்பெருமானோடே கலந்த திரு வனந்த வாழ்வானுக்கு அல்லது கூடாது ஆதலால் ‘அவன் கிடக்கை ஈது’ என்னும்; அருவினை யாட்டியேன் பெற்ற கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்து என்னாய் விளையும் என்று அறிகிறிலேன் -என்கிறாள்) 5 | கோமள வான் கன்றைப் புல்கி, ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்; போம் இள நாகத்தின் பின் போய், ‘அவன் கிடக்கை ஈது’ என்னும்; ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே!–4-4-5 | கோமளம் வான் கன்றை புல்கி,Komalam vaan kanrai pulgi - இனையபெரிய கன்றுகளைத் தழுவி(இவை) கோவிந்தன் மேய்த்தன என்னும்,Govindan meyththana ennum - பசுமேய்க்க முடிசூடின கண்ணன் (இனிது உகந்து) மேய்த்தவை என்று கூறுவாள்; போம் இளம் நாகத்தின் பின் போய்,Poam ilam naagaththin pin poay - இஷ்டப்படி ஓடுகின்ற இளைய நாகத்தின் பின்னே (இதுபோனவிடத்தில் அவனையும் காணலாம் என்று நினைத்துச்) சென்று அவன் கிடக்கை,Avan kidakkai - அவன் பள்ளிகொள்ளும் படுக்கை ஈது என்னும்,Eedhu ennum - இது என்று சொல்லுவாள்; அரு வினையாட்டியேன் பெற்ற,Aru vinaiyaattiyen petra - (அநுபவித்து முடிக்க) அரிய பாபத்தை யுடையேனான நான்பெற்ற கோமளம் வல்லியை,Komalam valliyai - ம்ருதுஸ்வபாவையாய், கொடிபோன்ற இவளை மாயோன்,Maayon - எம்பெருமான் மால் செய்து,Maal seiththu - மயக்கி செய்கின்ற கூத்து,Seiginra kooththu - பண்ணுகிற இத்தகைய கூத்தாட்டு ஆம் அளவு,Aam alavu - எவ்வளவில் ஆகும் என்று ஒன்றும் அறியேன்,Ondrum ariyen - ஒன்றும் அறிகிலேன். |