| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3045 | திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (ஜீவனத்திற்காகக் குடக்கூத்தாடித் திரிகிறவர்களுண்டே; அவர்கள் வந்து குடங்களை வீசியெறிந்து ஆடுமதுகண்டால் குடங்களெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்ல கோவாகிய கோவிந்தனே ஆடுவதாக ப்ரதிபத்திபண்ணி அதனை அருகேயிருந்து காண ஓடுகின்றாள். எப்படிப்பட்டவர்களையு மீடுபடுத்தவல்ல புல்லாஙகுழலின் இசைவந்து செவிப்பட்டால், கண்ணபிரானென்று சொல்லி வியாமோஹிக்கின்றாள். இடைச்சிகள் கொணர்ந்து விற்கும் வெண்ணையைக் கண்டால், அன்று அவன் திருவாய்ப்பாடியில் களவுகண்டு அமுதுசெய்த வெண்ணெயோடொத்த வெண்ணெய் இது என்று சொல்லா நின்றாள்; தாய் உதவாத தனிமையிலே பூதனையென்பவள் தாய்வடிவுகொண்டு வந்து நலியப்புக, அவளை முடித்துத் தன்னைச் சேமமாகத் தந்த உபகாரத்துக்குத் தோற்று இவள் பித்தேறினாளாயிற்று; இப்படியும் ஒரு விலக்ஷணமான பிச்சு உண்டோ வென்கிறாள்; திருத்தாய்.) 6 | கூத்தர் குடம் எடுத்து ஆடில்,‘கோவிந்தனாம்’எனா ஓடும்; வாய்த்த குழல் ஓசை கேட்கில், ‘மாயவன்’ என்றுமை யாக்கும்; ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில், ‘அவன் உண்ட வெண்ணெய் ஈது’ என்னும்; பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண் கொடி ஏறிய பித்தே!–4-4-6 | கூத்தர்,Kooththar - யானும் கூத்தாடுமவர்கள் குடம் எடுத்து ஆடில்,Kudam eduththu aadil - (குடக்கூத்தாடுதலை ஸ்வபாவமாகவுடைய) க்ருஷ்ணன் ஆம் என்று கருதி (காண்கைக்கு) ஓடுவாள்; வாய்த்த குழல் ஓசை கேட்கில்,Vaaiththa kuzhal osai kaetkil - இனிய குழலின் ஓசையைக் கேட்டாளகில் மாயவன் என்று,Maayavan enru - க்ருஷ்ணன் என்று நினைத்து மையாக்கும்,Maiyaakkum - மோஹியா நிற்பாள்; ஆய்ச்சியர்,Aaychchiyar - இடைச்சிகள் கையிலே வெண்ணெய்கள் காணில்,Vennaiygal kaanil - வெண்ணையைக் கண்டாளாகில் அவன் உண்ட,Avan unda - அவன் அமுது செய்தருளின் வெண்ணெய் இது என்கிறாள்: பேய்ச்சி முலை சுவைத்தாற்கு,Peychchi mulai suvaiththaarku - பூதனுடைய முலையை ப்ராணனேர்டே சுவைத்து முடித்த கண்ணபிரானுக்கு கொடி என்பெண்,Kodi enpen - கொடிபோன்றவளான என்னுடைய மகள் ஏறிய,Eeriya - தலைமண்டையிடும்படி கொண்ட பித்து,Piththu - பிச்சு இருந்தபடி ஏ,A - ஆச்சரியம். |