திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3046 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3046திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (“என்பெண்கொடி யேறியபித்தே” என்று கீழ்ப்பாட்டில் தலைக்கட்டிற்று. உலகில் பித்துக்கொள்ளிகளாயிருக்கு மவர்கள் வாயில் வந்தபடி எதையேனும் தப்புந்தவறுமாய்ப் பேசுவதுண்டே; அப்படி இவள் ஏதேனும் பேசுகின்றாளோ என்ன; பித்து ஏறின நிலைமையிலு;ம பகவத் விஷயத்தில் தெளிவு சிறிதும் மாறிற்றில்லை யென்கிறாள்.) 7
ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’ நீறு செவ்வே இடக் காணில், நெடுமால் அடியார்’ என்று ஓடும்; நாறு துழாய்மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்; தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே.–4-4-7
பதவுரை Show / Hide
ஏறிய பித்தினொடு,Yeriya pitthinodu - மிகுந்த மயக்கத்ததோடே கூடியிருக்கச்செய்தே (வேதாந்த வித்துக்கள் சொல்லுமாபோலே)
எல்லா உலகு,Yella ulagu - ஸகலலோகங்களும்
கண்ணன் படைப்பு என்னும்,Kannan padaippu ennum - க்ருஷ்ணனுடைய ஸ்ருஷ்டி என்று கூறுகிறாள்;
நீறு செவ்வே இட காணில்,Neeru sevve ida kaanil - பஸ்மத்தை மேல்நோக்கி இடக்கண்டாளாகில்
நெடுமால் அடியார் என்று ஓடும்,Netumaal adiyaar endru odum - ஸர்வேச்வரனுடைய அடியார் என்று கொண்டு (அவர்களைத் தொடர்ந்து) ஓடுகிறாள்;
நாறு துழாய் மலர்காணில்,Naaru thuzhaai malarkaanil - பரிமளம் வீசும் திருத்துழாயின் பூந்தாரைக் கண்டாளாகில்
நாரணன் கண்ணி ஈது என்னும்,Naaranan kanni eethu enum - ஸர்வஸ்வாமியான நாராயணனுடைய மாலை இது என்கிறாள்;
தேறியும் தேறாதும்,Theriyum theradhum - தேறினவளவிலும் கலங்கினவளவிலும்
இத் திரு,Ith thiru - திருமகள் போல்வளவான இப்பெண்பிள்ளை
மாயோன் திறத்தனள்,Maayon thirathanaal - எம்பெருமான் விஷயமல்லது வேறொன்தறறியாள்.