திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3053 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3053திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (திருவாய்மொழி அடிமை செய்யப்பெறுகையால் தமக் குண்டான ஆனந்தம் எம்பெருமானுடைய ஆனந்தத்தையும் அதிசயித்தது என்கிறார்.) 3
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை வீவு இல் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன்; வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–4-5-3
பதவுரை Show / Hide
வீவு இல் இன்பம்,Veeyu il inbam - அழிவில்லாத ஆனந்தமானது
மிக எல்லை நிகழ்ந்த,Miga ellai nigazhndha - மிகுதியான எல்லையிலே வர்த்திக்கிற (படியினாலே)
நம் அச்சுதன்,Nam achyudhan - அச்சுதன் என்னும் திருநாமத்தையுடையனாய்
வீவு இல் சீரன்,Veeyu il seeran - முடிவில்லாத வைலக்ஷண்யத்தையடையனாய்
மலர்கண்ணன்,Malarkannan - தாமரை மலர்போன்ற கண்களையடையனாய்
விண்ணோர் பெருமான் தன்னை,Vinnor perumaan thannai - விண்ணோர்க்குத் தலைவனானவனை
லீவு இல் காலம்,Leeyu il kaalam - ஒழிவில்லாத காலமெல்லாம்
இசை மாலைகள்,Isai maalaigal - இசைமிக்க சொல்மாலைகளாலே
ஏத்தி,Yethi - துதித்து
மேவ பெற்றேன்,Meva petren - கிட்டப்பெற்றேன்;
மேவி,Mevi - கிட்டி
வீவு இல்,Veeyu il - முடிவில்லாத
இன்பம்,Inbam - ஆனந்தத்தினுடைய
மிக எல்லை,Miga ellai - முடிவான எல்லையிலே
நிகழ்ந்தனன்,Nigazhndhanan - இராநின்றேன்.