| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3055 | திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (ஸ்ரீ ஆறாயிரப்படி -அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் வஸூ தேவ க்ருஹே அவதீர்ணனாய் -அர்ஜுனன் வ்யாஜத்தாலே சர்வாத்மாக்களுக்கும் சகல வேதார்த்த ப்ரகாசகனாய் இருந்த தன்னை எனக்கு சாத்மிக்க சாத்மிக்கக் காட்டித் தந்து அருளினான் – நானும் அவனைக் கண்டு காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியும் படி திருவாய் மொழி பாடி நாளும் மகிழ்வு எய்தினேன் -என்கிறார்) 5 | ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம் ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்; காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே.–4-5-5 | ஆற்ற,Aatra - பொறுக்கப்பொறுக்க நல்ல வகை,Nalla vagai - விலக்ஷ்ணமாயுள்ள (ஜ்ஞாந பக்திகள் பரபக்தி பரஜ்ஞாந பரம பக்திகளாகிற) ப்ரகாரங்களை காட்டும்,Kaattum - அடியார்களுக்குக் காட்டிக் கொடுக்கின்ற அம்மானை,Ammaanai - சர்வேச்வரனாய் அமரர் தம் ஏற்றை,Amarar tham etrai - நித்தியஸூரிநாதனாய் எல்லாப் பொருளும்,Ellaap porulum - எல்லா அர்த்த விசேஷங்களையும் (கீதோபநிஷந் முகத்தாலே) விரித்தானை,Viriththaanai - விரிவாக உபதேசித்தவனான எம்மான் தன்னை,Emmaan thannai - எம்பெருமானை வினை,Vinai - பாபங்களும் நோய்கள்,Noykal - பெரிய வ்யாதிகளும் காற்றின் முன்னம் கடுகி,Kaatrin munnam kadugi - காற்றிலும் வேகமாக ஓடிப்போய் கரிய,Kariya - வெந்துபோம்படியாக மாற்றம் மாலை புனைந்து,Maatram maalai punainthu - சொல்மாலையைத் தொடுத்து ஏத்தி,Yethi - துதித்து நாளும்,Naalum - ஸர்வகாலமும் மகிழ்வு எய்திளேன்,Magizhvu eythilaen - மகிழ்ச்சியைப்பெற்றேன் |