திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3056 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3056திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (‘ஆழ்வீர் ! உமக்கு வேண்டுவது என் ? என்று எம்பெருமான் கேட்க, இது வரையில் நான் பெறாதே இனி ஸாதித்துத் தரவேண்டுவதொரு பொருளுண்டோ வென்கிறார்.) 6
கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும் பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–4-5-6
பதவுரை Show / Hide
கரிய மேனி மிசை,Kariya meni misai - (திருக்கண்ணின்) கூரிய விழியின் மேலே
வெளிய நீறு,Veliya neeyru - அஞ்சன நீற்றினை
சிறிதே இடும்,Siridhey idum - அளவாக அணிகிற
பெரிய கோலம்,Periya kolam - அளவிறந்த அழகினையுடைய
தடம் கண்ணன்,Thadam kannan - விசாலமான திருக்கண்களையுடையனாய்
விண்ணோர் பெருமான் தன்னை,Vinnor perumaan thannai - நித்யஸூரிகளுக்குத் தலைவனான ஸர்வேச்வரனை
உரிய சொல்லால்,Uriya sollaal - (இவ்வழகுக்குத்) தகுதியான சொற்களாலே
இசை மாலைகள்,Isai maalaihal - இசைவடிவான மாலைகளையிட்டு
ஏத்தி,Yethi - துதித்து
உள்ள,Ull - அநுபவிக்க
பெற்றேற்கு எனக்கு,Petrerku enakku - பெற்றவனான எனக்கு
இன்று தொட்டும்,Indru thottum - இன்று தொடங்கி
இனி என்றும்,Ini endrum - இனிமேலுள்ள காலம் எல்லாம்
அரியது உண்டோ,Ariyadhu undo - துர்லபமாயிருப்பதும் ஒன்றுண்டோ