திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3058 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3058திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (ஆழ்வார் தம்பக்கலிலே எம்பெருமானுக்குண்டான அபிநிவேஸத்தைக் கண்டு, இப்படிப்பட்ட எம்பெருமானைக் கவி பாட வல்ல எனக்குப் பரமபதத்தில் ஸூரிகளும் நிகரல்லர் என்கிறார்.) 8
நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8
பதவுரை Show / Hide
நமக்கும்,Namakkum - நித்ய ஸம்ஸாரிகளான நமக்கும்
பூவின் மிசை நங்கைக்கும்,Poovin misai nangaikkum - தாமரை மலரில் வசிக்கும் பெரிய பிராட்டியாருக்கும்
இன்பனை,Inbanai - இன்பமளிப்பவனும்
ஞாலத்தார் தமக்கும்,Jnaalathaar thamakkum - லீலாவிபூதியிலுள்ளார்க்கும்
வானத்தவர்க்கும்,Vaanathavarkkum - பரமபத வாசிகளுக்கும்
பெருமானை,Perumaanai - தலைவனும்
தண் தாமரை சுமக்கும்,Than thaamarai sumakkum - குளிர்ந்த தாமரை மலர்சுமக்கும்படியான
பாதம் பெருமானை,Paadham perumaanai - திருவடிகளை யுடையனுமான ஸர்வேச்வரன் விஷயத்தில்
சொல்மாலைகள்,Solmaaligal - திருவாய்மொழியை
சொல்லும் ஆறு,Sollum aaru - சொல்லும்படியாக
அமைக்க வல்லேற்கு,Amaikka valleerkku - அமைதியைப்பெற்ற எனக்கு
அகல்வானத்து,Akalvaanathu - அகன்ற நித்ய விபூதியிலும்
யாவர் இனிநிகர்,Yaavar iningar - யார்தான் இனி ஒப்பாவார்?