திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3059 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3059திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (இப்பாட்டு ஆழ்வாருடைய ஸர்வ விலகஷ்ணமான பெருமையைக் காட்டுகின்றது. பரமபதத்திலுள்ள நித்யர்களென்ன. முக்தர்களென்ன, இவ்விபூதியிலுள்ள பராசர பாராசர்ய வால்மீகி ப்ரப்ருதிகளான மஹரிகளென்ன, ஆகிய இவர்களெல்லாரிற் காட்டிலும் ஆழ்வார்க்குண்டான வைலக்ஷ்ண்யம் இப்பாசுரத்தில் வெளியாகின்றது. எம்பெருமானுடைய பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சாவதாரங்களென்ற எல்லா நிலைமைகளிலும் புக்குக் கவி சொல்ல வல்ல வெனக்கு எதிருண்டோ வென்கிறார்.) 9
வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த் தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தன்னை, கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை, வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–4-5-9
பதவுரை Show / Hide
வானத்தும்,Vaanathum - ஸ்வர்க்கத்திலும்
உள்வானத்து உம்பரும்,Ulvaanathu umparum - அதுக்குள்ளாகப் பெரியதாயிருக்கிற மஹர்லோகாதிகளிலும்
மண்ணுள்ளும்,Mannullum - பூமிக்குள்ளும்
மண்ணின் கீழ் தானத்தும்,Mannin keezh thaandhum - பூமியின் கீழ் இருக்கிற பாதாள உலகத்திலும்
எண் திசையும்,Yen thisaiyum - இவற்றிலுண்டான எட்டுவிதமான பதார்த்தங்களிலும்
தவிராது,Thaviraadhu - ஒன்றிலும் வழுவாதபடி
நின்றான் தன்னை,Ninraan thannai - வ்யாபித்து நிற்பவனும்
கூன் நல் சங்கம்,Koon nal sangam - வளைந்தவடிவால் அழகிய ஸ்ரீ பாஞ்சஜந்யத்தை
தட கையவனை,Tada kaiyavane - பெரிய திருக்கையிலுடையவனும்
குடம் ஆடியை,Kudam aadiyai - குடக்கூத்தினாலே ஸகல ஜனங்களையும் வசீகரித்தவனும்
வானம் கோனை,Vaanam konai - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனுமான ஸர்வேச்வரன் வியத்திலே
கவி சொல்ல வல்லேற்கு,Kavi solla valleerku - கவி பாடவல்ல எனக்கு
இனி மாறு உண்டே,Ini maaru undae - இனி எதிர் உண்டோ?