| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3062 | திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (பராங்குசநாயகியன் தோழியானவள், ‘இந்நோய் பாண்டவபக்ஷ்பாதியான கண்ணபிரானடியாக வந்ததாகையாலே இதற்கு நீங்கள் பரிஹாரமாக நினைத்துச் செய்கிறவை பரிஹாரமல்ல’ என்று க்ஷேபிக்கிறாள்.) 1 | தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்! ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்; போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த் தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.–4-6-1 | அன்னை மீர்,Annai meer - தாய்மார்களே! இனி,Ini - இப்படிப்பட்ட நிலைமையான பின்பு தீர்ப்பாரை,Teerpaarai - இந்த நோயைத் தீர்க்க வல்லவர்களை யாம் எங்ஙனம் நாடுதலும்,Yaam engganam naaduthalum - நாம் எவ்விதமாகத் தேடிப்பிடிக்க முடியும்? (முடியாது) ஓர்ப்பால்,Oarpaal - நன்கு நிரூபிக்குமளவில் இ ஓள் நுதல்,Iol nuthal - அழகிய நெற்றியையுடைய இப்பெண்பிள்ளை உற்ற இது,Uttra idhu - அடைந்திருக்கின்ற இந்த நோயானது நல் நோய்,Nal noy - விலக்ஷ்ணமான நோயாகும் ; தேறினோம்,Therinom - திண்ணமாக அறிந்தோம் ; அன்று,Andru - முன்பொருகாலத்திலே போர்,Pour - பாரதப்போரிலே பாகு,Paagu - பாகனாயிருந்து செய்யவேண்டிய காரியங்களை தான் செய்து,Thaan seydhu - தானே முன்னின்று நடத்தி ஐவரை,Aivarai - பஞ்சபாண்டவர்களை வெல்வித்த,Velvitha - ஐயம் பெற்றவர்களாகச் செய்வித்த மாயம்,Mayam - ஆச்சரிய சத்தியுக்தரும் போர் தேர் பாகனார்க்கு,Pour ther paaganaarkku - யுத்தபூமியில் தேர்செலுத்தவல்லவருமான பெருமாள் விஷயத்திலே இவள்,Ival - இப்பராங்குச நாயகியினுடைய சிந்தை,Sindhai - மனமானது துழாய்,Thuzhaay - துழாவப்பெற்று திசைக்கின்றதுஎ,Thisaikkindradhue - அறிவழயா நின்றதே! |