திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3064 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3064திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (தவறுதலான செயல்களைச் செய்யாமல் எம்பெருமான் திருவடிகளை வாழ்த்துவதாகிற பரிஹார முறைமையை யனுட்டித்தால் இவளுடைய நோய் தீருமென்கிறாள்.) 3
இது காண்மின் அன்னைமீர்! இக்கட்டு விச்சி சொற் கொண்டு நீர் எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்! மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால் அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்தாகுமே.–4-6-3
பதவுரை Show / Hide
அன்னை மீர்,Annai meer - தாய்மார்களே!
இதுகாண்மின்,Idhu kaanmin - நான் சொல்லுகிற இக்காரியத்தைச் செய்துபாருங்கள்;
நீர்,Neer - நீங்கள்
இ கட்டுவிச்சி சொல்கொண்டு,I kattuvischi solkondru - இந்தக் குறத்தியின் பேச்சைக் கேட்டு
எதுவானாலும் செய்து,Eduvaanalum seydhu - ஸ்வரூப விருத்தமானதைச் செய்து
அங்கு,Angu - அவ்விடத்திலே
ஓர் கள்ளும் இறைச்சியும்,OrKallum iraichiyum - ஹேயமான மதுவையும் மாம்சஸத்தையும்
துர்வேல்மின்,Dhurveelmin - ஆராதனையாக வைக்கவேண்டர்
மது ஆர்,Madhu aar - தேன் பொருந்தின
துழாய்,Thuzhaai - திருத்துழாய் மாலையை
முடி,Mudi - திருமுடியிலணிந்துள்ள
மாயம் பிரான்,Maayam piraan - ஆச்சர்ய சக்தியுக்தனான ப்ரபுவினுடைய
கழல்,Kazhal - திருவடிகளை நோக்கி
வாழ்த்தினால்,Vazhthinaal - மங்களாசாஸனம் பண்ணினால்
அதுவே,Adhuvae - அதுதானே
இவள் உற்ற நோய்க்கும்,Ival utra noykum - இப்பெண்பிள்ளையடைந் திருக்கிற நோய்க்கும்
அரு மருந்து ஆகும்,Aru marundhu aagum - அருமையான மருந்தாகும்.