திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3065 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3065திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (எம்பெருமானுடைய திருநாமங்களை இப்பெண்பிள்ளை செவிப்படச் சொல்லுவதே; இந்நோய்க்குப் பரிஹாரமென்கிறாள்.) 4
மருந்து ஆகும் என்று,அங்கு ஓர் மாய வலவை சொற் கொண்டு,நீர் கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களன் இழைத்து என் பயன்? ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில், இவளைப் பெறுதிரே.–4-6-4
பதவுரை Show / Hide
(அன்னை மீர்),(Annai meer) - தாய்மார்களே!
மருந்து ஆகும் என்று,Marundhu aagum endru - நோய்க்குப் பரிஹாரமாகுமென்றெண்ணி
ஓர் மாயம் அலவை சொல் கொண்டு,Or maayam alavai sol kondu - வஞ்சகச் செய்கைகளையுடையளாயும் தோன்றினபடியே சொல்லுபவளாயமிருக்கின்ற ஒருத்தியின் பேச்சைக்கொண்டு
நீர்,Neer - நீங்கள்
கரு சோறும்,Karu sorum - கருஞ்சோற்றையும்
மற்றை செம்சோறும்,Matrai semsorum - மற்றுள்ள செஞ்சோற்றையும்
களன்,Kalan - நாற்சந்தியிலே
இழைத்து,Izhaitthu - இடுவதனால்
என் பயன்,En payan - என்ன பலனுண்டாம்? (இது வீணான காரியம்;)
உலகு ஏழும்,Ulaku ezhum - ஸப்தலோகங்களையும்
ஒருங்கு ஆக எ,Orungu aaga e - ஒருகாலே
விழுங்கி,Vizhungi - (பிரளம் கொள்ளாதபடி.)உட்கொண்டு
உமிழ்ந்திட்ட,Umiizhndittu - பிறகு வெளிப்படுத்தின
பெரு தேவன்,Peru devan - பரதேவதையான ஸ்ரீமந்நாராயணனுடைய
பேர்,Per - திருநாமங்களை
சொல்ல கிற்கில்,Solla kirl - (இவளது காதிலே படும்படி.)சொல்லவல்லீர்களானால்
இவளை பெறுதிர்,Ivalai peruthir - இவளை இழவாமே பெறுவீர்கள்.