திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3068 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3068திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (இவளது நோய்க்குப் பரிஹாரமாக தேவதாந்தர பஜனம் பண்ணினால் இவளுக்கு இழவேயாம். இவள் பிழைக்க வேணுமென்றிருந்தீர்களாகில் ஸ்ரீவைஷ்ணவர்களைப் பணிவதே பாங்கு என்கிறாள். ஆடறுக்கவும் மது நிவேதனம் பண்ணவும் பாரிக்கின்ற பரிஹாரமுறையை வாய்விட்டு நிந்திக்கின்றாள்.) 7
அணங்குக்கு அருமருந்து என்று,அங்கு ஓர் ஆடும் கள்ளும்பராய், துணங்கை எறிந்து,நும் தோள் குலைக் கப்படும் அன்னைமீர்! உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்? வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே.–4-6-7
பதவுரை Show / Hide
அணங்குக்கு,Anangukku - இப்பெண்பிள்ளைக்கு
அரு மருந்து என்று,Aru marunthu endru - அருமையான மருந்தென்று சொல்லி
அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய்,Angu or aadum kallum paraai - தேவதாந்தரத்திற்கு ஆடறுக்கவும் கள் நிவேதனம் செய்யவும் பாரித்து
சுணங்கை எறிந்து,Sunangai erindhu - ஒருவகைக் கூத்தாடுதலையும் செய்வித்துக் கொண்டு
நும் தோள் குலைக்க படும் அன்னைமீர்,Num thol kullaikka padum annai meer - தோள்கள் துடிக்கக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற தாய்மார்களே!
உணங்கல்கெட,Unangal kedu - (இந்தக் கூத்தாடுதலைக் கண்டு கொண்டிருப்பதும் ஒரு வேடிக்கையோ?) உலர்த்தின நெல் பாழாய்ப் போக
கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்,Kazhuthai uthadu aattam kandu en payan - (அதனை மேய்கிற) கழுதையின் உதடு அசைகின்ற அழகைக் கண்டு கொண்டிருப்பதனால் ஒரு பயனுண்டோ?
மாயன் பிரான்,Maayan praan - ஆச்சரிய சக்தியையுடையனான எம்பெருமானுடைய
தமர்,Thamar - பக்தர்களான
வேதம் வல்லாரை,Vedam vallaarai - வைதிகர்களை
வணங்கீர்கள்,Vanangeerkaal - வணங்குங்கள்.