Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3071 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3071திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (இப் பராங்குச நாயகிக்குக் கண்ணபிரான் பக்கலிலுள்ள அளவு கடந்த ப்ராவண்யத்தை யறிந்து நீங்கள் அதற்குத் தகுதியாக நடந்து கொள்வதே யுக்தமென்கிறாள் தோழி.) 10
உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே.–4-6-10
அவனை அல்லால்,Avanai allaal - எம்பெருமானைத் தவிர்த்து
மற்று ஒரு தெய்வம்,Matru oru deivam - வேறொரு தெய்வத்தை
உன்னித்து,Unnithu - ஒரு வஸ்துவாக நினைத்து
தொழாள்,Thozhaal - (இப்பெண்பிள்ளை) தொழுவது கிடையாது:
நும்,Num - (இப்படியிருக்க) உங்களுடைய
இச்சை,Icchai - மனம் போனபடியே
சொல்லி,Solli - (நான் அநுவாதம் செய்யவும் தகாத சொற்களைச்) சொல்லி
நும்,Num - உங்களுடைய
தோள் குலைக்கப்படும் அன்னை மீர்,Thol kulaikkappadum annai meer - தோள் அசையநிற்கிற தாய்மார்களே!,
மன்னப்படும்,Mannappadum - நித்யமாக விளங்குகின்ற வேதங்களினால் பிரதி பாதிக்கப்படுகிறவனும்
வண் துவராபதி மன்னனை,Van Dhuvaraapathi mannanai - அழகிய துவாரகாபுரிக்கு அதிபதியுமான எம்பெருமானை
ஏத்துமின்,Yaathumin - துதியுங்கோள்:
ஏத்தலும்,Yaathalum - துதித்தவுடனே
கதொழுது,Kadozhuthu - (இப்பெண்பிள்ளை உணர்த்தி பெற்று, அவனைத்) தொழுது
ஆடும்,Aadum - களித்துக் கூத்தாடுவாள்.