Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3073 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3073திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (ஆழ்வார் சில ஞானிகளைச் சிறுமாமனிசர் என்று அருளிச்செய்வதுண்டு; வடிவு சிறுத்து ஞானம் பெருத்தவர்கள் என்கிற காரணத்தாலே அவர்களைச் சிறுமாமனிசரென்கிறது. இப்பாட்டின் முதலடியில் ஒரு விதத்திலே தம்மையும் சிறுமாமனிசராகச் சொல்லிக் கொள்கிறார் போலும். நற்குண மொன்றுமில்லாததனால் சிறியவன்; பண்ணின பாபங்களில் பெரியவன் என்கிறார்) 1
சீலம் இல்லாச் சிறியே னேலும், செய்வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
காலந் தோறும் யான் இருந்து, கைதலை பூசலிட்டால்,
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே.–4-7-1
சீலம் இல்லா,Seelam illa - நன்மை யொன்று மில்லாத
சிறியன் ஏலும்,Siriyan eelum - சிறியவனா யிருந்தேனாகிலும்
செய் வினையோ,Sey vinaiyo - செய்த பாபமோ
பெரிது,Peridhu - பெரிதாயிருக்கின்றது;
ஆல்,Aal - அந்தோ!;
ஞாலம் உண்டாய்,Jalam undaay - (பிரளயத்தில்) உலகங்களை உண்டவனே!
நாராயணா,Naraayana - நாராயணனே!
என்று என்று,Endru endru - என்றிப்படிப் பலகாலும் சொல்லி
காலம் தோறும்,Kaalam thorum - எல்லாக்காலத்திலும்
யான் இருந்து,Yaan irundhu - நான் ஆசையோடிருந்து கொண்டு
கை தலை பூசல் இட்டால்,Kai thalai poosal ittaal - கையைத் தலையிலே வைத்துக் கூப்பிட்டால்,
கோலம் மேனி,Kolam meni - அழகிய திருமேனியை
காண,Kaan - நான் ஸேவிக்குமாறு
வாராய்,Vaaraay - வருகிறார்யில்லை;
கூவியும் கொள்ளாய்,Kooviyum kollaay - கூவிக் கொள்வதும் செய்கின்றில்லை.