Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3075 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3075திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (நான் விரும்புகிறபடி என் கண்முன்னே வந்து காட்சி தந்தருளத் திருவுள்ளமில்லையாகிலும் ‘-நீ பாவி, உனக்கு நான் காட்சிதரமாட்டேன்” என்கிறவொரு வார்த்தையையாவது என் கண் வட்டத்திலே வந்து சொல்லி போனாலாகாதோவென்கிறார்.) 3
ஈவு இலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்?
தாவி வையம் கொண்ட எந்தாய்! தாமோதரா! என்று என்று,
கூவிக் கூவி நெஞ்சு உருகி, கண் பனி சோர நின்றால்,
பாவி நீ என்று ஒன்று சொல்லாய், பாவியேன் காணவந்தே.–4-7-3
தீ வினைகள்,Thee vinaigal - பாவங்களை
ஈவு இலாத,Eevu ilaadha - முடிவில்லாதபடி
எத்தனை செய்தனன் கொல்,Eththanai seydhanan kol - எவ்வளவு செய்தேனோ!
தாவி,Thaavi - திருவடிகளாலே வியாபித்து
வையம்,Vaiyam - உலகங்களை
கொண்ட,Konda - ஸ்வாதீனப்படுத்திக் கொண்ட
எந்தாய்,Endhaay - ஸ்வாமியே!
தாமோதரா,Dhamodharaa - தர்மபால் ஆப்புண்ட தழும்பை உதரத்திலுடையவனே!
என்று என்று கூவி கூவி,Endru endru koovi koovi - என்று பலகால்சொல்லி இடைவிடாதே கூப்பிட்டு
நெஞ்சு உருகி,Nenju urugi - நெஞ்சு நீராயுருகி
கண் பனி சோர நின்றால்,Kan pani soora ninraal - கண்ணீர் பெருக நின்றால்,
பாவியேன்,Paaviyaen - பாவியான நான்
காண,Kaana - கண்ணாலே ஸேவிக்ககும்படியாக
வந்து,Vandhu - எழுந்தருளி
நீ பாவி என்று,Nee paavi endru - ‘(ஆழ்வாரே!) நீர் பாபிகாணும்’ என்று
ஒன்று சொல்லாய்,Ondru sollaai - ஒரு வார்த்தையும் சொல்லுகின்றாயில்லை.