| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3076 | திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (பிரமன் முதலிய தேவர்களுக்கும் காணக்கிடைக்காத பெருமானை வடிவழகு காண விரும்பி வெட்கமுற்று நான் கூப்பிடாநின்றேனே! இதற்கு என்ன பலனுண்டு! என்கிறார்.) 4 | காண வந்து,என் கண் முகப்பே தாமரைக் கண் பிறழ, ஆணிச் செம்பொன் மேனி எந்தாய்! நின்று அருளாய் என்று என்று, நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என் பேணி வானோர் காண மாட்டாப் பீடுடை அப்பனையே?–4-7-4 | வானோர்,Vaanor - பிரமன் முதலிய தேவர்கள் பேணி,Paeni - விரும்பியும் காணமாட்டா,Kaanamaattaa - காணமுடியாதபடி பீடு உடை,Peedu udai - பெருமை வாய்ந்த அப்பனை,Appanai - ஸ்வாமியை நோக்கி, ஆணி செம் பொன் மேனி எந்தாய்,Aani sem pon maeni endhaay - “மாற்றுயர்ந்த பொன் போல விரும்பத்தகுந்த திருமேனி படைத்தபிரானே! தாமரை கண் பிறழ,Thamarai kan pirazha - தாமரைப்பூப்போன்ற திருக்கண்கள் விளங்கும்படி (என்னைப் பார்த்துக் கொண்டு) காணவந்து,Kaanavandhu - நான் காணுமாறு வந்து என் கண் முகப்பே,En kan mukappae - என் கண் முன்னே நின்றருளாய்,Nindrarulaay - நின்றருளவேணும் என்று என்று,Endru endru - என்று ஓயாதே சொல்லி சிறு தகையேன் நான்,Siru thakaiyaen naan - நீசனாகிய நான் நாணம் இல்லா,Naanam illaa - வெட்கம் கெட்டவனாய்க்கொண்டு இங்கு அலற்றுவது என்,Ingu alatravathu en - இங்கே அலற்றுவதற்கு ஒரு பிரயோஜனமுமில்லையே!. |