Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3078 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3078திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (எம் பெருமானே! என்னுள்ளே நீ நிறைந்திருந்தும் எனக்கு நீ உன்னைக் காட்டாமலிருப்பது திருவுள்ளமில்லாமையன்றோ என்று நான் அறிந்து வைத்தும் அவிவேகத்தாலே காணவாராய்! காணவாராய்! என்று கதறுகின்றேன் என்கிறார்.) 6
நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான், யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன், ஞானம் இல்லை; நாள்தோறும் என்னுடைய
ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே.–4-7-6
நாள் தோறும்,Naal thorum - ஸர்வகாலத்திலும்
என்னுடைய,Ennudiya - என்னுடைய
ஆக்கை உள்ளும்,Aakkai ullum - சரீரத்தினுள்ளும்
ஆவி உள்ளும்,Aavi ullum - ஆத்மாவினுள்ளும்
அல் புறத்தின் உள்ளும்,Al purathin ullum - மற்றுமுண்டான இந்த்ரியம் முதலானவற்றிலும்
நீக்கம் இன்றி,Neekkam indri - நீங்காமல் (ஒன்றையும் விடாமல்)
எங்கும் நின்றாய்,Engum nindraai - எங்கும் வியாபித்திருக்கின்ற பெருமானே!
நின்னை,Ninnai - உன்னை
அறிந்து அறிந்தே,Arindhu arindhae - (அருள் செய்யத் திருவுள்ளமில்லாதவன் என்று) நன்றாக நான் அறிந்துவைத்தும்
யான்,Yaan - நான்
உன்னை காண்பான்,Unnai kaanbaan - உனது திவ்யமங்கள விக்ரஹத்தை ஸேவிக்கவேண்டி
நோக்கி நோக்கி,Nokki nokki - எல்லாத் திசைகளிலும் பார்த்து
எனது ஆவி உள்ளே,Enadu aavi ullae - எனது நெஞ்சுக்குள்ளே
நாக்கு நீள்வன்,Naakku neelvan - நாக்கை நீட்டுகின்றேன் (ஆசைப்படுகிறேன்)
ஞானம் இல்லை,Gnanam illai - இப்படிப்பட்ட நான் விவேகமற்றவனத்தனை.