Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3079 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3079திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (ஆழ்வீர்! *நாக்கு நீள்வன் ஞானமில்லை* என்று உம்மை நீர் நிந்தித்துக் கொள்வதானது என்னுடைய நிந்தையிலன்றோ முடிந்து நிற்கிறது; உமக்கு நான் ஒரு உபகாரமும் செய்யவில்லைபோலே வருந்துகின்றீரே; நன்கு ஆராய்ந்து பாரும்; எத்தனை உபகாரங்கள் என்னால் பெற்றிருக்கிறீரென்பதை அறிந்து சொல்லும்’ என்று எம்பெருமான் அருளிச்செய்ய, ‘பிரானே! சில உதவிகளை நீ செய்ய நான் பெற்றதுண்டு; அடியோடு ஒன்றுமில்லையென்று சொல்லுகின்றிலேன்; பெற்றவளவு போராது என்கிறேத்தனை’ என்று சொல்லத் தொடங்கி, பெற்ற அளவு இன்னதென்கிறார் இப்பாட்டில்; -பெறவேண்டியதை மேற்பாட்டிலே சொல்ல விருக்கிறார்.) 7
அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந் துழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–4-7-7
நறுதுழாயின் கண்ணி அம்மா,Naruthuzhaayin kanni amma - பரிமளம்மிக்க திருத்துழாய் மாலையையுடைய பெருமானே!
நான் உன்னை கண்டுகொண்டு,Naan unnai kandukondu - நான் உன்னை (மாநஸஸாக்ஷ்ர்த்காரமாக) ஸேவிக்கப்பெற்று
அறிந்து அறிந்து,Arindhu arindhu - உன்னுடைய உபாயத்வத்தையும் உபேயத்வத்தையும் நன்றாக அறிந்து
தேறி தேறி,Thaeri thaeri - மிக்க தெளிவையுடையேனாகி
யான்,Yaan - இப்படித் தெளிவுபெற்ற நான்
எனது ஆவி உள்ளே,Enadu aavi ullae - என் நெஞ்சுக்குள்ளே
நிறைந்த ஞானம் மூர்த்தியாயை,Niraindha gnanam moorthiyaayai - பரிபூர்ண ஜ்ஞானஸ்வரூபனான உன்னை
நின்மலம் ஆக வைத்து,Ninmalam aaga vaithu - விசதமாக அநுபவித்து
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன்,Piranthum setthum nindru idarum paedhaimai theerndhu ozhindhaen - பிறப்பதும் சாவதுமாயிருந்து படுகிற அஜ்ஞான ஸம்ஸாரத்தைத் தவிர்த்துக் கொள்ளப் பெற்றேன்.