| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3082 | திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (நம்மிடத்தில் ஒரு கைம்முதலுமில்;லாமையை நோக்கி எம்பெருமான் நமக்குக் காட்சி தர விரும்பாமலிருப்பது யுக்தமே; அப்படி அவன் இருக்கும்போது அவனை நாம் மறந்து பிழைக்கலாமன்றோ; அப்படி மறக்கவும் முடியாதபடி அப்பெருமான் மாநஸ ஜ்ஞானத்திற்கு விஷயமாகிக் கொண்டிருக்கிறானே! இதற்கு என்னபண்ணுவேனென்று கிலேசப்படுகிறார்.) 10 | சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப, பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்; மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என் தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே.–4-7-10 | சக்கரத்து அண்ணலே என்று,Sakkarathu annale endru - கையும் சக்கரமுமான அழகைக்காட்டி என்னை ஈடுபடுத்திக்கொண்டவனே! என்று சொல்லி தாழ்ந்து,Thaazhnthu - அநுபவம் கிடைக்கப்பெறாத க்லேசத்தையடைந்து கண்நீர் ததும்ப,Kannir thadhumba - கண்ணீர்மல்க பக்கம் நோக்கி நின்று,Pakkam noakki nindru - சுற்றும் பார்த்து நின்று அலந்தேன்,Alandhen - தளர்ந்தவனான பாவியேன்,Paavi yaen - பாவியானநான் காண்கின்றிலேன்,Kaangindrilaen - காணப்பெறுகின்றிலேன்: (காணக்கிடைக்காதவனை மறந்துவிடலாமென்று பார்த்தாலோ) மிக்க ஞானம் மூர்த்தி ஆய,Mikka gnanam moorthi aai - மிகுந்த ஞானஸ்வரூபனாய் வேதம் விளக்கினை,Vedham vilakkina - வேதமாகிற தீபத்தாலே காணப்படும்வனான எம்பெருமானை என் தக்க,En thakka - எனக்கேற்ற ஞானம் கண்களாலே,Gnanam kangalaale - ஞானமாகிற கண்ணாலே கண்டு தழுவுவனே,Kandu thazhuvuvane - கண்டு தழுவிக் கொண்டேயிருக்கிறேனே! (எப்படி மறக்கமுடியும்?) |