| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3084 | திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) ((ஏறாளுமிறையோனும்) ஸௌசீல்யமே வடிவெடுத்த எம்பெருமான் விரும்பாத அழகிற நிறம் எனக்கு ஏதுக்கு? என்கிறாள்.) 1 | ஏறு ஆளும் இறையோனும், திசை முகனும், திருமகளும், கூறு ஆளும் தனி உடம்பன், குலம் குல மா அசுரர்களை நீறு ஆகும் படியாக நிருமித்து, படை தொட்ட மாறாளன் கவராத மணிமாமை குறை இலமே.–4-8-1 | ஏறு ஆளும் இறையோனும்,Eru aalum iraiyonum - விருஷபவாஹனனான சிவபிரானும் திசைமுகனும்,Thisaimukanum - நான்முகனும் திருமகளும்,Thirumagalum - பெரியபிராட்டியாரும் கூறு ஆளும்,Kuru aalum - ‘இன்னஇடம் இன்னாருடையது’ என்று பங்கிட்டுக் கொண்டு வஸிக்கப்பெற்ற தனி உடம்பன்,Thani udamban - விலக்ஷ்ணமான திருமேனியையுடையவனும், அசுரர்களை,Asurargalai - அசுரர்களை குலம் குலம் ஆ,Kulam kulam aa - கூட்டங் கூட்டமாக நீறு ஆகும்படி ஆக,Neeru aagumbadi aaga - சுடநீறாகி யொழியும்படியாக நிருமித்து,Nirumiththu - ஸங்கல்பித்து படை தொட்ட,Padai thotta - (அவ்வளவேயன்றிக்கே) ஆயதங்கொண்டும் காரியஞ் செய்த மாறு ஆளன்,Maaru aalan - எதிர்த்தலையுடையனுமான எம்பெருமான் கவராத,Kavaradha - விரும்பாத மணி மாமை,Mani maamai - அழகிய நிறத்தில் குறைவு இலம்,Kuraivu ilam - அபேஷையுடையோமல்லோம். |