திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3085 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3085திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) (பிராட்டியோடே கூடியிருக்குமழகைக் காட்டி என்னை யடிமை கொண்டவன் விரும்பாத நெஞ்சால் ஒரு காரியமில்லையென்கிறாள். குற்றங்களையும் நற்றமாக உபபாதித்து அருள் புரிவிக்கின்ற பெரிய பிராட்டியாரும் கூடவிருக்கச்செய்தே என்னை உபேக்ஷித்திருக்குமாகில் என்னுடைமையால் எனக்குத் தான் ப்ரயோஜனம் என்? என்கிறாள்.) ((ஏறாளுமிறையோனும்) ஸௌசீல்யமே வடிவெடுத்த எம்பெருமான் விரும்பாத அழகிற நிறம் எனக்கு ஏதுக்கு? என்கிறாள்.) 2
மணி மாமை குறையில்லா மலர் மாதர் உறை மார்பன் அணி மானத் தடைவரைத் தோள் அடல் ஆழித் தடக்கையன் பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறை இலமே.–4-8-2
பதவுரை Show / Hide
மணி மாமை குறைவு இல்லா,Mani maamai kuraivu illaa - அழகிய நிறம் நிரம்பி யிருக்கப் பெற்ற
மலர்மாதர்,Malarmadhaar - பூமகளான பெரியபிராட்டியார்
உறை,Urai - நித்யவாஸம் பண்ணப்பெற்ற
மார்பன்,Maarban - திருமார்பையுடையவனும்
அணிமானம் தட வரை தோள்,Animaanam thada varai thol - அழகியதாகப் பெருத்து திருத்தோள்களையுடையவனும்
அடல் ஆழி தடகையன்,Adal aazhi thadakaiyan - தீக்ஷ்ணமான திருவாழியைப் பெரிய திருக்கையிலேயுடையவனும்
பணி மானம் பிழையாமே,Pani maanam pizhaiyaame - கைங்கர்ய வ்ருத்திகள் தப்பாதபடி
அடியேனை,Adiyenai - அடியேனை
பணிகொண்ட,Panikonda - கிங்கரனாக ஆக்கிக்கொண்டவனும்
மணி மாயன்,Mani maayan - நீலமணிவண்ணனுமான எம்பெருமான்
கவராத,Kavaradha - விரும்பாத
மட நெஞ்சால் குறைவு இலம்,Mada nenjaal Kuraivu ilam - விதேயமான நெஞ்சில் அபேக்ஷையுடையோமல்லோல்.