திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3086 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3086திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) ((மடநெஞ்சால்) கண்ணபிரான் விரும்பாத அடக்கம் எனக்கு வேண்டாமென்கிறாள்.) 3
மட நெஞ்சால் குறையில்லா மகள் தாய் செய்து ஒருபேய்ச்சி விட நஞ்ச முலை சுவைத்த மிகு ஞானச் சிறு குழவி பட நாகத்து அணைக் கிடந்த பருவரைத் தோட் பரம் புருடன் நெடு மாயன் கவராத நிறையினால் குறை யிலமே.–4-8-3
பதவுரை Show / Hide
மடநெஞ்சால் குறைவு இல்லா ,Mada nenjaal kuraivu illaa - நெஞ்சில் நெகிழ்ச்சியைப் பரிபூர்ணமாகக்கொண்ட
தாய் மகள் செய்த,Thaai magal seitha - யசோதையாகிய தாயாகத் தன்னையாக்கிக்கொண்ட
ஒரு பேய்ச்சி,Oru peychi - பூதனையென்கிறவொரு பேய்ச்சியினுடைய
விடம் நஞ்சம்,Vidam nanjam - கொடிய விஷம்பொருந்திய
முலை,Mulai - முலையை
சுவைத்த,Suvaitha - உறிஞ்சியுண்டவனும்
மிகு ஞானம் சிறு குழவி,Migu jnaanam siru kuzavi - மிக்க ஞானத்தையுடைய சிறு குழந்தையானவனும்
படம் நாகம்அணைகிடந்த,Padam naagam anaikidantha - படமெடுத்த நாகமாகிற படுக்கையிலே சயனிப்பவனும்
பரு வரை தோள்,Paru varai thol - பெரியமலைபோலே வளர்;த தோள்களையுடையவனும்
பரம்புருடன்,Paramburudan - புருஷோத்தமனாக ப்ரஸித்த பெற்றவனும்
நெடு மாயன்,Nedu maayan - எல்லைகடந்த ஆச்சர்யகுண சேஷ்டிதங்களை யுடையவனுமான எம்பெருமான்
கவராத,Kavaradha - விரும்பாத
நிறைவினால் குறைவு இலம்,Niraivinaal kuraivu ilam - அடக்கத்தில் அபேக்ஷயுடையோமல்லோம்.