திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3087 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3087திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) (நப்பின்னைப் பிராட்டியைப் பெறுதற்காக எருதேழடர்த்த பெருமான் விரும்பாத செவ்விய நிறம் எனக்கு ஏதுக்கென்கிறாள்.) 4
நிறையினால் குறைவில்லா நெடும் பணைத் தோள் மடப்பின்னை பொறையினால் முலை யணைவான் பொரு விடை ஏழு அடர்த்த உகந்த கறையினார் துவர் உடுக்கைக் கடையாவின் கழி கோல் கை சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே –4-8-4
பதவுரை Show / Hide
நிறைவினால் குறைவு இல்லா,Niraivinaal kuraivu illaa - குறையற்ற ஸ்த்ரீத்வ பூர்த்தியையடையவளும்
நெடு பணை தோள்,Nedupanai thol - நீண்டு பணைத்ததோள்களையுடையவனும்
மடம்,Madam - அறிந்தும் அறியாமையாகிற மடப்பம் பொருந்தியவளுமான
பின்னை,Pinnai - நப்பின்னையினுடைய
முலை அணைவான்,Mulai anaivaan - திருமுலைத்தடத்தோடு சேருகைக்காக (மணப்பதற்காக)
பொறையினால்,Poraiyinaal - வருத்தங்களைப் பொறுத்திருந்து
பொரு விடை ஏழ் அடாத்து உகந்த,Poru vidai ezh adaatthu ugandha - கொடிய விருஷபங்களேழையும் நொரித்து மகிழ்ந்தவனும்
கறையின் ஆர் துவர் உடுக்கை,Karaiyin aar thuvar udukkai - (நாவல் முதலிய காட்டுப்பழங்களின்) கறைமிகுந்த துவர்நிறமான வஸ்த்ரத்தையும்
கடையா,Kadaiya - பால்கறக்கும் முங்கிற்குழாயையும்
கழிகோல்,Kazhikol - கையிலேஉடையவனும்
சறையினார்,Saraianaar - தன்உடம்பைப்பேணாதவனுமான எம்பெருமான்
கவராத,Kavaradha - விரும்பாத
தளிர்நிறத்தால் குறைவு இலம்,Thalirnirathaal kuraivu ilam - தளிர்போலே செவ்விதான நிறத்தில் விருப்பமுடையோமல்லோம்