Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3090 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3090திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) (ஆச்ரித விரோதியான இரணியனைப் பிளந்தொழிந்த நரஸிம்ஹன் விரும்பாத வளை எனக்கு வேண்டா வென்கிறாள்) 7
கிளர் ஒளியால் குறைவில்லா அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து,
கிளர் ஒளிய இரணியனது அகல் மார்பம் கிழித்து உகந்த,
வளர் ஒளிய கனல் ஆழி வலம் புரியன், மணி நீல
வளர் ஒளியான் கவராத வரிவளையால் குறையிலமே.–4-8-7
கிளர்ஒளியால் குறைவு இல்லா,Kilar oliyaal kuraivu illaa - கிளர்கின்ற தேஜஸ்ஸூ நிரம்பப் பெற்ற
அரி உரு ஆய்,Ari uru aai - நரசிங்கமூர்த்தியாய்
கிளர்ந்து எழுந்து,Kilarndhu ezhundhu - சீறிக்கொண்டு தோன்றி,
கிளர் ஒளிய இரணியனது,Kilar oliya iranianathu - மிக்கதேக பொருந்திய இரணியனுடைய
அகல் மார்பம்,Akal maarbam - விசாலமான மார்பை
கிழித்து உகந்த,Kizhiththu ugandha - இருபிளவாக்கித் திருவுள்ளமுகந்தவனும்,
வளர் ஒளிய,Valar oliya - வளர்கின்ற ஜ்வாலையையுடைய
கனல்,Kanal - நெருப்புப் போலேயிருக்கிற
ஆழி,Aazhi - சக்கரத்தையும்
வலம்புரியன்,Valampuriyan - சங்கையுமுடையவனும்,
நீலம் மணி வளர் ஒளியான்,Neelam mani valar oliyaan - நீலரத்னம் போன்று விளங்குகின்ற திருமேனி விளக்கத்தை யுடையனுமான பெருமான்
கவராத,Kavaradha - விரும்பாத
வரி வளையால் குறைவு இலம்,Vari valaiyaal kuraivu ilam - அழகிய வளையில் அபேக்ஷ யுடையோமல்லோம்.