திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3092 | திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) (வாணனாயிரம் தோள் துணித்த பெருமாள் விரும்பாத உடம்பு எனக்கு ஏதுக்கு? என்கிறாள்.) 9 | மேகலை யால் குறை யில்லா மெலி வுற்ற அகல் அல்குல
போக மகள் புகழ்த் தந்தை விறல் வாணன் புயம் துணித்து
நாக மிசைத் துயில்வான் போல் உலகெல்லாம் நன்கொடுங்க
யோகு அணைவான் கவராத உடம்பினாற் குறையிலமே.–4-8-9 | பதவுரை Show / Hideதந்தை,Thandai - புகழையுடையனாய் புகழ்,Pugazh - புகழையுடையனாய் விறல்,Viral - பலிஷ்டனான வாணன்,Vaanan - பாணாஸூரனுடைய புயம்,Puyam - தோள்களை துணித்து,Thuniththu - அறுத்தொழித்தவனாய், நாகம் மிசை,Naagam misai - ஆதிசேஷன்மீது துயில்வான் போல்,Thuyilvaan pol - உறங்குவான் போலே உலகு வல்லாம்,Ulagu vallaam - ஸகலலோகமும் நன்கு ஒடுங்க,Nangu odunga - நன்மையிலே சேரும்படி யோகு அணைவான்,Yogu anaivaan - உபாயசிந்தை பண்ணுமவான எம்பெருமான் கவராத,Kavaradha - விரும்பாத உடம்பினால் குறைவு இலம்,Udambinaal kuraivu ilam - உடம்பில் அபேக்ஷயுடையோ மல்லோம். |