திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3093 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3093திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி - பிரதி பக்ஷம் எத்தனையேனும் மிக்கதாகிலும் போக்கும் ஸ்வ பாவனாய் அத்யந்த சீலவானாய் உள்ள எம்பெருமான் கவராத உயிரினால் கார்யம் உடையோம் அல்லோம் என்கிறாள்.) 10
உடம்பினால் குறையில்லா உயிர் பிரிந்த மலைத் துண்டம் கிடந்தன போல் துணி பலவா அசுரர் குழாம் துணித்து உகந்த தடம் புனல சடை முடியன் தனி ஒரு கூற மர்ந்துறையும் உடம்புடையான் கவராத உயிரினால் குறையிலமே.–4-8-10
பதவுரை Show / Hide
உடம்பினால் குறைவு இல்லா,Udambinaal kuraivu ella - பெரிவுடம்பு படைத்த
அசுரர் குழாம்,Asurar kuzhaam - அசுரக்சுட்டங்களை
உயிர் பிரிந்த மலை துண்டம் கிடந்தனபோல்,Uyir pirindha malai thundam kidanthanapol - உயிரைவிட்டு நீங்கின பர்வதகண்டங்கள் கிடந்காற்போலே
பல துணி ஆ,Pala thuni aa - பலபல கண்டங்களாம்படி
துணித்து,Thuniththu - துண்டித்து
உகந்த,Ugandha - (ஆச்ரிதவிரோதிகள் தொலைந்தன வென்று) திருவுள்ள முவந்தவானாய், ஒரு பக்கத்திலே,
தடம் புனல் சடை முடியன் தனி அமர்ந்து உறையும்,Tadam punal sadai mudian thani amarndhu uraiyum - பரந்த கங்காதீர்த்தத்தைத்தரித்த ஜடாமகுடத்தையுடையனான சிவபிரான் பொருந்தி வாஸம் பண்ணப்பெற்ற
உடம்பு உடையான்,Udambu udaiyaan - திருமேனியை யுடைவனான எம்பெருமான்
கவராத,Kavaradha - விரும்பாத
உயிரினால் குறைவு இலம்,Uyirinaal kuraivu ilam - ஆத்மாவில் அபேக்ஷையுடையோ மல்லோம்.