| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3094 | திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) (இருள் தருமாஞாலத்தில் பிறப்பையறுத்துப் பரமபதம் பெறுதற்கு இத்திருவாய்மொழி ஸாதனமாயிருக்குமென்று பயலுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11 | உயிரினால் குறை இல்லா உலகு ஏழ் தன் உள் ஒடுக்கித் தயிர் வெண்ணெய் உண்டானைத் தடங் குருகூர்ச் சடகோபன் செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப் பத்தால் வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே.–4-8-11 | உயிரினால் குறைவு இல்லா,Uyirinaal kuraivu ella - எண்ணிறந்த ஆத்மாக்களையுடைய ஏழ் உலகு,Ezh ulagu - ஸமந்த லோகங்களையும் தன்னுள்; ஒடுக்கி,Thannul; odugi - தன்னுடைய ஸங்கல்பத்திலே யடக்கிவைத்து தயிர் வெண்ணெய் உண்டானை,Thayir vennai undaanai - தயிரும் வெண்ணெயும் அமுது செய்தவனான எம்பெருமான் விஷயமாக தடம் குருகூர் சடகோபன்,Tadam kurugoor sadagopan; - தடம் குருகூர் சடகோபன்; செயிர் இல்,Seir il - குற்றமற்ற இசை,Isai - இசையோடு கூடின சொல்மாலை,Solmaalai - சொல்மாலையாகிய ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரம் பாட்டினுள்ளே இபத்தால்,Ipaththaal - இந்தப்பதிகத்தினால் வயிரம் சேர் பிறப்பு அறுத்து,Vairam saer pirappu aruthu - உரமேறின ஸம்ஸாரத்தை அடியறுத்து வைகுந்தம்,Vaigundham - பரமபதத்தை நண்ணுவர்,Nannuvar - கிட்டப்பெறுவர். |