| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3095 | திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (எம்பெருமானே! ஸர்வரக்ஷண ஸமர்த்தனாய் ஸர்வ நிர்வாஹகனாய் நீ யிருக்க, இந்த ஸம்ஸாரிகள் அளவுகடந்த துயரங்களை யநுபவித்துத் கொண்டிருக்குமிருப்பு கண்டு என்னால் பொருத்திருக்க முடியவில்லை; இவர்களுடைய ஆர்த்தியைத் தீர்ப்பதோ, அன்றி இவர்களுடைய இழவை நான் சிந்திக்க வொண்ணாதபடி என்னை முடிப்பதோ செய்யவேணும் என்கிறார்.) 1 | நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்துஏங்க, எண்ணாராத் துயர்விளைக்கும் இவைஎன்ன உலகியற்கை? கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு, தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே.–4-9-1 | நண்ணாதார்,Nannaathaar - பகைவர்கள் முறுவலிப்ப,Muruvalippa - மகிழ்ந்து சிரிக்கவும் நல் உற்றார்,Nal uttraar - நல்ல உறவினர்கள் தரைந்து ஏங்க,Taraithu aengka - மனமுருகிவருந்தவும் எண்ஆரா துயர் விளைக்கும்,Enumaara thuyar vilaiyum - எண்ணமுடியாத துன்பங்களை விளைக்கின்ற வையான இவை உலகு இயற்கை,Ivai ulagu iyarkai - இந்த லோகயாத்ரைகள் என்ன,Enna - என்ன!; கண் ஆளா,Kan aalaa - தாயாளுவே! கடல் கநை;தாய்,Kadal kanaithaay - (தேவர்களுக்கு அமுத மளிக்கக்) கடலைக் கடைந்தவனே! உன கழற்கே,Una kazharkae - உனது திருவடி வாரத்திலேயே வரும் பரிசு,Varum parisu - நான் வந்து சேரும்படி தண்ணாவாது,Thannaavaadhu - காலதாமதமின்றியில் அடியேனே,Adiyene - அடியேனே சாம்ஆறு,Saamaaru - மரணமடையும் படி பணி,Pani - அருள் செய்யவேணும்; (கண்டாய் - முன்னிலையசை) |