திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3098 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3098திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) ((கொள்ளென்று கிளர்ந்து.) ஐச்வர்யமானது அநர்த்த ஹேது என்பதைக் கட் கூடாகக் காணா நிற்கச்செய்தேயும், பின்னையும் மேல் விழுந்து அதிலே நசை பண்ணிப் போருகிற லோக யாத்ரையைக் காணப் போகிறதில்லையே! என்கிறார்.) 4
கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ் செல்வம் நெருப்பாகக் கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை! வள்ளலே! மணி வண்ணா! உனகழற்கே வரும்பரிசு, வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே.–4-9-4
பதவுரை Show / Hide
கொள் என்று கிளர்ந்து எழுந்த,Kol endru kilarndhu ezundhu - ‘என்னைக்கொள் என்னைக்கொள்’ என்று மேன்மேலும் பெருகித்தோற்றுகிற
பெரு செல்வம்,Peru selvam - பெரிய செல்வமானது
நெருப்பு ஆக,Neruppu aga - நெருப்புப்போல் ஸமூல நாசம் பண்ணு நிற்கச் செய்தேயும்
கொள் என்று,Kol endru - (அதில் நசை யொழியாமல்) அந்தச்செல்வத்தையே மேன் மேலும் கொள்ளும்படியாக
தமம் மூடும் இவை உலகு இயற்கை என்ன,Tamam moodum Ivai ulagu iyarkai enna - தமோ குணம் மேலிட்டுச் செல்லுகின்ற இந்த லோகஸ்வபான மிருந்தபடி என்னே!
வள்ளலே,Vallale - மஹாதாரனே!
மணி வண்ணா,Mani vanna - நீலமணிவண்ணனே;
உன கழற்கே வரும் பரிசு,Un kazarke varum parisu - உன் திருவடிவாரத்திலேயே வந்து சேரும்படி
அடியேனே,Adiyene - அடியேன் விஷயத்தில்
வள்ளல் செய்து,Vallal seydhu - ஔதார்யத்தைக் காட்டி
உனது அருளால்,Unathu arulaal - உனது பரம க்ருபையாலே கைக்கொண்டருளவேணும்.