Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3099 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3099திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (பிறப்பது மிறப்பதுமாய் நோவு பட்டுத் திரிகிற இந்த ஸம்ஸாரிக்ள நடுவில்நின்றும் இத் துன்பம் நடையாடாத தேச விசேஷத்திலே யென்னை யழைத்துக் கொண்டருள வேணுமென்கிறார்.) 5
வாங்கு நீர் மலர் உலகில் நிற்பனவும் திரிவனவும்
ஆங்கு உயிர்கள் பிறப்பிறப்புப் பிணி மூப்பால் தகர்ப் புண்ணும்;
ஈங்கு இதன் மேல் வெந் நரகம்; இவை என்ன உலகியற்கை!
வாங்கு எனை நீ, மணிவண்ணா! அடியேனை மறுக்கேலே.–4-9-5
வாங்கும்,Vaangum - உலகங்களை யெல்லாம் பிறகு தன் பக்கலிலே ஸம்ஹரித்துக் கொள்ள வல்லதான
நீர்,Neer - நீரிலே
மலர்,Malar - மலர்ந்த
நிற்பனவும்,Nirpanavum - ஸ்தாவரங்களும்
திரிவனவும்,Thirivanavum - ஜங்கமங்களுமான
ஆங்கு,Aangu - அவ்வவ்விடங்களிலுள்ள
உயிர்கள்,Uyirkal - பிராணிகள்
ஈங்கு,Eenggu - இப்புவியில்
பிறப்பு இறப்பு பிணி மூப்பால்,Pirappu irappu pinimubal - பிறப்பது இறப்பது வியாதி கொண்டிருப்பது கிழத்தன மடைவது ஆகிய இவற்றாலே
தகர்ப்புண்ணும்,Thakarppunnum - வருந்திக்கிடக்கும்;
இதன் மேல்,Idhan mel - இறந்தொழிந்தபின்போ வென்னில்
வெம் நரகம்,Vem naragam - கொடிய நரக வேதனையாம்; (இவை என்ன உலகு இயற்கை!;)
நீ,Nee - நீ
எனை,Enai - இத்துயரம் பொறுக்க மாட்டாத என்னை
வாங்கு,Vaanggu - அங்கீகரித்தருளவேணும்
அடியனே,Adiyanee - உன்னடியனான என்னை
மறுக்கேல்,Marukel - கலங்கப் பண்ண வேண்டா.